PT 6.9.4

மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்

1531 துன்றோளித்துகில்படலம் துன்னிஎங்கும்மாளிகைமேல் *
நின்றாரவான்மூடும் நீள்செல்வத்திருநறையூர் *
மன்றாரக்குடமாடி வரையெடுத்துமழைதடுத்த *
குன்றாரும்திரள்தோளன் குரைகழலேஅடைநெஞ்சே!
1531 tuṉṟu ŏl̤it tukil paṭalam * tuṉṉi ĕṅkum māl̤ikaimel *
niṉṟu āra vāṉ mūṭum * nīl̤ cĕlvat tirunaṟaiyūr **
maṉṟu ārak kuṭam āṭi * varai ĕṭuttu mazhai taṭutta *
kuṉṟu ārum tiral̤ tol̤aṉ * kurai kazhale aṭai nĕñce-4

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1531. O heart, let us go and worship the ankleted feet of the lord, who carried with his arms as strong as hills Govardhanā mountain as an umbrella, stopping the storm and saving the cows and the cowherds. He dances in the mandrams in rich Thirunaraiyur where the palaces are lined up next to one another and many flags that fly high reach the sky and hide the clouds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துன்று ஓளி நெருங்கி ஒளியுள்ள; துகில் துணிகள் நிறைந்த; படலம் துன்னி கொடித் திரள்கள்; எங்கும் மாளிகைமேல் மாளிகையெங்கும்; நின்று ஆர ஆகாசத்தை; வான் மூடும் மறைக்குமளவு இருப்பதாய்; நீள் செல்வ மிகுந்த செல்வமுடைய; திருநறையூர் திருநறையூரில் இருக்கும் பெருமானை; மன்று ஆரக் பொது இடமெங்கும்; குடம் ஆடி குடக்கூத்தாடி; வரை எடுத்து மலை எடுத்து; மழை தடுத்த மழை தடுத்த; குன்று ஆரும் திரள் மலைபோன்ற திரண்ட; தோளன் தோள்களையுடையவனை; குரை சப்திக்கும் திருவடிகளை; கழலே உடையவனை; அடை நெஞ்சே! அடை நெஞ்சே!