PT 6.9.1

மனமே! நறையூர் நம்பியின் அடியினை சேர்

1528 பெடையடர்த்தமடவன்னம் பிரியாது * மலர்க்கமலம்
மடலெடுத்துமதுநுகரும் வயலுடுத்ததிருநறையூர் *
முடையடர்த்தசிரமேந்தி மூவுலகும்பலிதிரிவோன் *
இடர்கெடுத்ததிருவாளன் இணையடியேஅடைநெஞ்சே! (2)
1528 ## pĕṭai aṭartta maṭa aṉṉam * piriyātu * malark kamalam
maṭal ĕṭuttu matu nukarum * vayal uṭutta tirunaṟaiyūr ** -
muṭai aṭartta ciram enti * mūvulakum pali tirivoṉ *
iṭar kĕṭutta tiruvāl̤aṉ * iṇai-aṭiye aṭai nĕñce-1

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1528. O heart, go and reach the feet of the divine one who took away the trouble of Shivā when he wandered through all the three worlds and begged, carrying the skull of Nānmuhan. Our lord stays in Thirunaraiyur surrounded with fields where a handsome male swan, without leaving his mate, opens the petals of a lotus and drinks honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெடை பெடை அன்னம்; அடர்த்த மட அன்னம் மட அன்னத்தை; பிரியாது எப்போதும் பிரியாமல் கூடியிருந்து; மலர்க் கமலம் தாமரைப்பூவின்; மடல் எடுத்து இதழ்களைத்தள்ளி; மது நுகரும் தேன் பருகும்; வயல் உடுத்த வயல்களால் சூழ்ந்த; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் பெருமானின்; முடை துர்நாற்றமுள்ள; அடர்த்த பிரம்ம கபாலத்தை; சிரமேந்தி கையிலேந்தி; மூவுலகும் மூவுலகிலும்; பலி திரிவோன் திரிந்து வருந்திய சிவனின்; இடர் கெடுத்த சாபம் தீர்த்த; திருவாளன் பெருமானின்; இணை அடியே இரு பாதங்களையும்; அடை பற்றுவாய்; நெஞ்சே! நெஞ்சே!