PT 6.5.5

மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்

1492 விடையேழ்வென்று மென்தோளாய்ச்சிக்குஅன்பனாய் *
நடையால்நின்றமருதம்சாய்த்த நாதனூர் *
பெடையோடுஅன்னம் பெய்வளையார்தம்பின்சென்று *
நடையோடியலி நாணியொளிக்கும்நறையூரே.
1492 viṭai ezh vĕṉṟu * mĕṉ tol̤ āyccikku aṉpaṉ āy *
naṭaiyāl niṉṟa * marutam cāytta nātaṉ ūr ** -
pĕṭaiyoṭu aṉṉam * pĕyval̤aiyār-tam piṉ cĕṉṟu *
naṭaiyoṭu iyali * nāṇi ŏl̤ikkum-naṟaiyūre-5

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1492. The lord who conquered seven bulls to marry the cowherd girl Nappinnai with soft arms, and when two Asurans came as marudam trees broke them and killed them stays in beautiful Thirunaraiyur where female swans walk behind the women ornamented with lovely bangles, but, unable to walk as beautifully as they, feel ashamed and hide behind them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடை ஏழ் ஏழு எருதுகளை; வென்று வென்றவனும்; மென் மென்மையான; தோள் தோள்களையுடைய; ஆய்ச்சிக்கு நப்பின்னைக்கு; அன்பன்ஆய் நாதனும்; நின்ற நிலைத்து நின்ற; மருதம் மருதமரங்களை; நடையால் நடையினாலே; சாய்த்த சாய்த்த; நாதன் ஊர் பெருமான் இருக்கும் ஊர்; பெடையோடு பெடையோடு; அன்னம் அன்னம்; பெய் அழகிய; வளையார் தம் வளை அணிந்த பெண்களின்; பின் சென்று பின் சென்று; நடையோடு அவர்களைப் போல் நடக்க; இயலி பார்த்து முடியாததால்; நாணி வெட்கமடைந்து; ஒளிக்கும் ஒளிந்துகொள்ளும் இடம்; நறையூரே திருநறையூராகும்