PT 6.5.3

இலங்கையைச் செற்றவன் இருப்பிடம் நறையூர்

1490 ஆனைப்புரவி தேரொடுகாலாளணிகொண்ட *
சேனைத்தொகையைச்சாடி இலங்கைசெற்றானூர் *
மீனைத்தழுவிவீழ்ந்தெழும் மள்ளர்க்குஅலமந்து *
நானப்புதலில் ஆமையொளிக்கும்நறையூரே.
1490 āṉai puravi terŏṭu kālāl̤ * aṇikŏṇṭa *
ceṉait tŏkaiyaic cāṭi * ilaṅkai cĕṟṟāṉ ūr ** -
mīṉait tazhuvi vīzhntu ĕzhum * mal̤l̤arkku alamantu *
nāṉap putalil * āmai ŏl̤ikkum-naṟaiyūre-3

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1490. Our lord who destroyed Lankā, fighting with the Rākshasas and their armies of horses, elephants, chariots and warriors stays in beautiful Thirunaraiyur where turtles hide inside the bunches of nānal grass because they worry that if the fish that the mallars have caught slip from their hands and fall on the ground, they might bend to pick them up and take the turtles also.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆனை யானைகளும்; புரவி குதிரைகளும்; தேரொடு தேரொடு; காலாள் காலாட்படையுமாக; அணிகொண்ட அணிவகுத்து; சேனைத் சேனை; தொகையை கூட்டத்தை; சாடி சிதைத்து; இலங்கை இலங்கையை; செற்றான் ஊர் அழித்த பெருமானின் ஊர்; மீனை மீன்களை பிடிக்க; தழுவி வீழ்ந்து அணைத்து பின் விழுந்து; எழும் எழுந்திருக்கும்; மள்ளர்க்கு உழவர்களுக்கு; அலமந்து பயந்து; நானப் புதலில் மஞ்சள் புதரிலே; ஆமை ஆமைகள்; ஒளிக்கும் ஒளிந்துகொள்ளுமிடமான; நறையூரே திருநறையூராகும்