PT 6.5.2

நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது

1489 முனையார்சீயமாகி அவுணன்முரண்மார்வம் *
புனைவாளுகிரால் போழ்படஈர்ந்தபுனிதனூர் *
சினையார்தேமாஞ்செந்தளிர்கோதிக் குயில்கூவும் *
நனையார்சோலைசூழ்ந்து அழகாயநறையூரே.
1489 muṉai ār cīyam āki * avuṇaṉ muraṇ mārvam *
puṉai vāl̤ ukirāl * pozhpaṭa īrnta puṉitaṉ ūr ** -
ciṉai ār temāñ cĕn tal̤ir kotik * kuyil kūvum
naṉai ār colai cūzhntu * azhaku āya-naṟaiyūre-2

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1489. The faultless lord who took the form of a lion that fights fearfully, went to Hiranyan and with his sharp claws split open the chest of that enemy Asuran stays in beautiful Thirunaraiyur surrounded by groves flourishing with buds that drip honey where cuckoo birds sing and play on the tender red shoots of mango trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனை ஆர் போர்புரியத் தகுந்த; சீயம் ஆகி நரசிம்மனாக வந்து; அவுணன் இரணியனின்; முரண் மார்வம் முரட்டு மார்பை; புனை ஒளிபொருந்திய; வாள் உகிரால் வாள் போன்ற நகங்களால்; போழ்பட இரண்டு பிளவாகும்படி; ஈர்ந்த பிளந்த; புனிதன் புனிதனான எம்பெருமான்; ஊர் இருக்கும் ஊர்; சினை ஆர் கருத்தரித்திருந்த; குயில் குயில்கள் தழைத்திருந்த; தேமாஞ் செந் தேமா மரங்களின்; தளிர் கோதி தளிர்களைக் கோதி கூவும்; நனையார் அப்போதலர்ந்த மலர்களையுடைய; சோலை சூழ்ந்து சோலைகளால் சூழ்ந்த; அழகாய நறையூரே அழகிய திருநறையூராகும்