PT 5.8.9

தொண்டை மன்னனுக்குத் திருமந்தரம் உபதேசித்தவன்

1426 துளங்குநீண்முடியரசர்தங்குரிசில்
தொண்டைமன்னவன்திண்திறலொருவற்கு
உளங்கொளன்பினோடுஇன்னருள்சுரந்து
அங்கோடுநாழிகையேழுடனிருப்ப *
வளங்கொள்மந்திரம்மற்றவற்குஅருளிச்
செய்தவாறு அடியேனறிந்து * உலக
மளந்தபொன்னடியேயடைந்துய்ந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே! (2)
PT.5.8.9
1426 tul̤aṅku nīl̤ muṭi aracar-tam kuricil *
tŏṇṭai maṉṉavaṉ tiṇ tiṟal ŏruvaṟku *
ul̤am kŏl̤ aṉpiṉoṭu iṉ arul̤ curantu * aṅku
oṭu nāzhikai ezh uṭaṉ iruppa *
val̤am kŏl̤ mantiram maṟṟu avaṟku arul̤ic
cĕyta āṟu * aṭiyeṉ aṟintu * ulakam
al̤anta pŏṉ aṭiye aṭaintu uynteṉ *
-aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-9

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1426. Lovingly you gave your sweet grace to the heroic king of the Thondai country with a shining crown, staying with him for seven nāzhigais and teaching him a precious mantra. I heard about that and have come to you to worship your golden feet that measured the world and the sky. You are my refuge and I am saved, O god of Thiruvarangam surrounded by beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துளங்கு ஒளிமயமான; நீள் முடி கிரீடத்தையுடைய; அரசர் தம் அரசர்களுக்கு; குரிசில் அரசனாய்; திண் திறல் ஒருவற்கு திடமான பலத்தையுடைய; தொண்டை தொண்டைமான்; மன்னவன் சக்கிரவர்த்தி விஷயத்தில்; உளம் கொள் உள்ளத்தில்; அன்பினோடு அன்போடு; இன் அருள் சுரந்து இன் அருள் கூர்ந்து; அவற்கு அங்கு அவற்கு அங்கு; ஓடு நாழிகை காலம் வீணாகாமல்; ஏழுடன் இருப்ப ஏழு நாழிகைக்குள் ஏழு அர்த்தங்கள்; வளம் கொள் மந்திரம் வளம் மிக்க மந்திரத்தை; மற்று அருளி செய்தவாறு அருளி செய்தவாறு; அறிந்து உலகம் உலகங்களை ஆராய்ந்து; அளந்த அளந்த உனது; பொன் அடியே பொன்னான அடியையே நான்; அடியேன் அடைந்து சரணமாகப் பற்றி; உய்ந்தேன் உய்வடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!