PT 5.8.6

மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்

1423 மன்னுநான்மறைமாமுனிபெற்ற
மைந்தனை மதியாதவெங்கூற்றந்
தன்னையஞ்சி * நின்சரணெனச்சரணாய்த்
தகவில்காலனையுகமுனிந்தொழியா *
பின்னைஎன்றும்நின்திருவடிபிரியாவண்ணம்
எண்ணியபேரருள் * எனக்கும்
அன்னதாகுமென்றுஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!
PT.5.8.6
1423 maṉṉu nāṉmaṟai mā muṉi pĕṟṟa
maintaṉai * matiyāta vĕm kūṟṟam-
taṉṉai añci * niṉ caraṇ ĕṉa caraṇ āyt *
takavu il kālaṉai uka muṉintu ŏzhiyā **
piṉṉai ĕṉṟum niṉ tiruvaṭi piriyā vaṇṇam *
ĕṇṇiya per arul̤ * ĕṉakkum
aṉṉatu ākum ĕṉṟu aṭi-iṇai aṭainteṉ * -
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-6

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1423. When Markandeyan, the son of a sage and scholar of all the four Vedās, was terrified of cruel Yama and came to you asking for refuge you grew angry at ruthless Yama, took his power away and gave your wonderful grace to young Markandeyan, granting him a place beneath your divine feet so he never would be separated from you. I heard about that and thought that if I worship you you will give me your divine grace and keep me under your feet. I have come to you, my god. I am your slave and you are my refuge, O god of Thiruvarangam surrounded by beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு எப்போதும்; நான்மறை வேதங்களை ஓதுபவனாய்; மா முனி தியானயோகத்தையுடைய ரிஷி; பெற்ற பிள்ளையான; மைந்தனை மார்க்கண்டேயனை; மதியாத மதியாத; வெம் கூற்றம் கொடிய யமனை; தன்னை அஞ்சி கண்டு பயந்து; நின் சரண் உன்னையே; என சரண் ஆய் சரணமடைந்து; தகவு இல் கருணையில்லாத; காலனை யமனை; உக முனிந்து கோபித்து; ஒழியா பயத்தைப் போக்கி அதோடு விடாமல்; பின்னை என்றும் மேலும் எப்போதும்; நின்திருவடி உன் திருவடியை; பிரியாவண்ணம் பிரியாமலிருக்கும்படி; எண்ணிய எண்ணிய; பேரருள் எனக்கும் பேரருள் எனக்கும்; அன்னது அப்படியே; ஆகும் என்று ஆகவேணும் என்று நினைத்து; அடியிணை உன் பாதங்களில்; அடைந்தேன் சரண்மடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!