PT 5.8.4

சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்

1421 நஞ்சுசோர்வதோர்வெஞ்சினவரவம்
வெருவிவந்துநின்சரணெனச்சரணா *
நெஞ்சில்கொண்டுநின்னஞ்சிறைப்பறவைக்கு
அடைக்கலம்கொடுத்து அருள்செய்ததறிந்து *
வெஞ்சொலாளர்கள்நமன்றமர்கடியர்
கொடியசெய்வனவுள * அதற்குஅடியேன்
அஞ்சிவந்துநின்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!
PT.5.8.4
1421 nañcu corvatu or vĕm ciṉa aravam *
vĕruvi vantu niṉ caraṇ ĕṉa caraṇ āy *
nĕñcil kŏṇṭu niṉ am ciṟaip paṟavaikku *
aṭaikkalam kŏṭuttu arul̤cĕytatu aṟintu **
vĕm cŏlāl̤arkal̤ namaṉ-tamar kaṭiyar *
kŏṭiya cĕyvaṉa ul̤a * ataṟku aṭiyeṉ
añci vantu niṉ aṭi-iṇai aṭainteṉ *
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-4

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1421. When an eagle with beautiful wings, terrified of an angry poisonous snake, came to you and asked for refuge, you felt pity in your heart, gave your grace and saved it—I have heard about your kindness. Afraid that the cruel messengers of Yama, speaking unkind words, will come to me and do cruel things, I, your slave, have come to you and worship your feet to be saved from them, O god of Thiruvarangam surrounded with beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் க்ரூரமான; சொலாளர்கள் சொற்களையுடைய; நமன் தமர் யம தூதர்கள்; கடியர் பயங்கர வேஷத்துடன்; கொடிய கொடிய; செய்வன உள செயல்களைச் செய்வர்; அதற்கு அடியேன் அதற்கு நான்; அஞ்சி வந்து பயந்து; நஞ்சு சோர்வது ஓர் விஷத்தை உமிழும் ஒரு; வெம் சின க்ரூரமான; அரவம் சுமுகன் என்னும் பாம்பானது; வெருவி தன்னைக் கொல்ல வந்த; வந்து நின் கருடனுக்கு பயந்து உன்னை; சரண் என சரணமடைய; சரணாய் அதைக் காப்பாற்றியவனும்; நெஞ்சில் கொண்டு (அவனுக்கு நெர்ந்த துன்ப நிலையையும் அவன் சொல்லையும்) உன் திருவுள்ளத்திற்கொண்டு; நின் அம் சிறைப் உனது அடியவனான அந்த அழகிய சிறகுகளையுடைய; பறவைக்கு கருடனுக்கு; அடைக்கலம் அப்பாம்பை; கொடுத்து காப்பாற்றுவாய் என்று ஒப்படைத்து; அருள் செய்தது அருள் செய்தவற்றை; அறிந்து அறிந்து; நின் அடியிணை உன் பாதங்களில்; அறிந்து சரணமடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!