PT 5.3.9

திரிவிக்கிரமனே! எனக்கு அருள் செய்

1376 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று அகலிடம் முழுதினையும் *
பாங்கினால்கொண்டபரம! நிற்பணிந்தெழுவேன்எனக்கு அருள்புரியே *
ஓங்குபிண்டியின்செம்மலரேறி வண்டுழிதர * மாவேறித்
தீங்குயில்மிழற்றும்படப்பைத் திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.9
1376 āṅku māvali vel̤viyil irantu cĕṉṟu *
akal-iṭam muzhutiṉaiyum *
pāṅkiṉāl kŏṇṭa parama!-niṉ paṇintu ĕzhu
veṉ * ĕṉakku arul̤puriye ** -
oṅku piṇṭiyiṉ cĕm malar eṟi * vaṇṭu
uzhitara * mā eṟit
tīm kuyil mizhaṟṟum paṭappait * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-9

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1376. You, the highest one, who went to the sacrifice of king Mahabali, begged him for three feet of land and then cleverly measured the earth and the sky with your two feet stay in Thiruvellarai filled with groves where bees fly to the asoka trees and swarm around their red flowers and the cuckoo birds coo loudly when they see those red flowers because they think that the bees have caught fire. I worship you. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓங்கு ஓங்கி வளரும்; பிண்டியின் அசோக மரத்தின்; செம் மலர் சிவந்த மலர்கள் மீது; வண்டு ஏறி வண்டுகள் ஏறி; உழிதர ஸஞ்சரிக்க; தீம் இனிய இசயையுடைய; குயில் குயில்கள்; மா மாமரங்களின் மேலேறி; ஏறி மிழற்றும் நின்று கூவும்; படப்பை கொடித் தோட்டங்களையுடையதான; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; மாவலி மஹாபலியின்; வேள்வியில் யாகபூமியில்; இரந்து ஆங்கு சென்று சென்று யாசித்து; அகல் இடம் அனைத்து; முழுதினையும் உலகங்களையும்; பாங்கினால் முறைபடி; கொண்ட தனதாக்கிக் கொண்ட; பரம! எம்பெருமானே!; நின் பணிந்து உன்னை வணங்கி; எழுவேன் துதிக்கின்றேன்; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்