PT 5.3.2

ஹயக்ரீவனாக அவதரித்தவனே! அருள்செய்

1369 வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி, முன்பரிமுகமாய் *
இசைகொள்வேதநூலென்றிவைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
உயர்கொள்மாதவிப்போதொடுலாவிய மாருதம்வீதியின் வாய் *
திசையெல்லாம்கமழும்பொழில்சூழ் திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.2
1369 ## vacai il nāṉmaṟai kĕṭutta am malar ayaṟku
arul̤i * muṉ pari mukamāy *
icai kŏl̤ veta-nūl ĕṉṟu ivai payantavaṉe! *
ĕṉakku arul̤puriye ** -
uyar kŏl̤ mātavip potŏṭu ulāviya *
mārutam vītiyiṉ vāy *
ticai ĕllām kamazhum pŏzhil cūzh * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-2

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1369. You who, taking the form of a horse, brought the Vedās and taught them to the sages when Nānmuhan, seated on a lotus had lost them stay in Thiruvellarai where a breeze blows though the tall Madhavi trees and spreads fragrance through all the streets and in the groves and in all directions. Give us your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயர் கொள் ஓங்கிவளரும்; மாதவி குருக்கத்தி மரங்களிலுள்ள; போதொடு மலர்களினிடையில்; உலாவிய உலாவிய; மாருதம் காற்று; வீதியின்வாய் வீதிதோரும் வீசும்போது; திசை எல்லாம் திசை எல்லாம்; கமழும் மணம் பரப்பும்; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் முன்பு ஒரு சமயம்; வசை இல் குற்றமற்றதான; நான்மறை நான்கு வேதங்களையும்; கெடுத்த துலைத்த; அம் மலர் மலரில் தோன்றின; அயற்கு அருளி பிரமனுக்கு அருளியவன்; பரிமுகமாய் குதிரை வடிவாக அவதரித்து; இசை கொள் ஸ்வரப்ரதானமான; வேத நூல் வேத சாஸ்த்ரங்கள்; என்று இவை இவை என்று சொல்லி; எனக்கு அருள்புரியே எனக்கு அருளவேணும்