PT 5.10.6

இராமன் இருக்கும் இடம் இது

1443 தம்பியொடுதாமொருவர்தன்துணைவி காதல்துணையாகமுனநாள் *
வெம்பியெரிகானகம்உலாவுமவர்தாம் இனிதுமேவுநகர்தான் *
கொம்புகுதிகொண்டுகுயில்கூவமயிலாலும் எழிலார்புறவுசேர் *
நம்பிஉறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.6
1443 tampiyŏṭu tām ŏruvar taṉ tuṇaivi kātal * tuṇai
āka muṉa nāl̤ *
vĕmpi ĕri kāṉakam ulāvum avar-tām * iṉitu
mevum nakar-tāṉ ** -
kŏmpu kuti kŏṇṭu kuyil kūva mayil ālum * ĕzhil
ār puṟavu cer *
nampi uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram-
naṇṇu maṉame-6

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1443. The lord who as Rāma went to the hot forest with his beloved wife and his brother Lakshmana stays happily in Nandipuravinnagaram where cuckoo birds sing from the branches and peacocks dance in the beautiful groves. O heart, think of that place and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாம் ஒருவர் தாம் ஒருவரான ராமன்; தம்பியொடு தம்பி லக்ஷ்மணனையும்; தன் காதல் தன் பிரியமான; துணைவி துணைவி ஸீதையையும்; துணை ஆக துணை ஆகக்கொண்டு; முன நாள் முன்பொரு நாள்; வெம்பி எரி எரிகின்ற; கானகம் உஷ்ணமான காட்டிலே; அவர் தாம் இனிது இனிது; உலாவும் உலாவுமவர்; கொம்பு கிளைகளிலிருந்து; குதி கொண்டு குதித்து; குயில் கூவ குயில்கள் கூவ; மயில் ஆலும் மயில்கள் ஆட; எழில் ஆர் அழகிய; புறவு சேர் சோலைகளையுடைய; மேவும் பெருமான்; நகர் தான் இருக்கும் நகர் தான்; நம்பி உறைகின்ற கல்யாணகுணங்களுடைய பெருமான்; நகர் இருக்கும் நகரான; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக