PT 5.10.4

அசுரர்களை அழித்தவன் அமரும் இடம் இது

1441 பிறையினொளியெயிறிலகமுறுகியெதிர்பொருதுமென வந்தஅசுரர் *
இறைகளவைநெறுநெறெனவெறியஅவர்வயிறழல நின்றபெருமான் *
சிறைகொள்மயில்குயில்பயிலமலர்களுகஅளிமுரல அடிகொள்நெடுமா *
நறைசெய்பொழில்மழைதவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.4
1441 piṟaiyiṉ ŏl̤i ĕyiṟu ilaka muṟuki ĕtir pŏrutum ĕṉa *
vanta acurar *
iṟaikal̤-avai-nĕṟu-nĕṟu ĕṉa vĕṟiya-avar vayiṟu azhala *
niṉṟa pĕrumāṉ **
ciṟai kŏl̤ mayil kuyil payila malarkal̤ uka al̤i murala *
aṭikŏl̤ nĕṭu mā *
naṟaicĕy pŏzhil mazhai tavazhum * nantipuraviṇṇakaram-
naṇṇu maṉame-4

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1441. When the Asurans with shining teeth like crescent moons came to fight with the lord and said, “We will oppose him with our might, ”- our Nedumāl fought with them. He made their stomachs burn and their bodies fall to pieces, defeating them so they ran away with empty hands. He stays in Nandipuravinnagaram with groves where peacocks dance, cuckoos call, flowers bloom, bees sing, tall mango trees spread their fragrance and clouds float in the sky. O heart, think of going to that place where he is.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறையின் ஒளி சந்திர ஒளி போன்ற; எயிறு பற்களோடு; இலக முறுகி வந்து எதிரிட்டு; எதிர் பொருதும் சண்டைபோடுவோம்; என வந்த என்று வந்த; அசுரர் அஸுரர்களுடைய; இறைகள் அவை அப்படிப்பட்ட சரீரங்கள்; நெறு நெறு நெறு நெறுவென்று முறியும்படி; என வெறிய அவர் முஷ்டியால் குத்தி; வயிறு அழல அவர்கள் வயிறெரியும்படி செய்து; நின்ற நின்ற; பெருமான் பெருமான் இருக்குமிடம்; சிறை கொள் சிறகுகளையுடைய; மயில் மயில்களும்; குயில் பயில குயில்களும் சேர்ந்து வாழும்; மலர்கள் உக பூக்கள் உதிர; அளி முரல வண்டுகள் ரீங்கரிக்க; அடி கொள் கீழேவேரூன்றி; நெடு மா மேலே நீண்டுள்ள மா மரங்கள்; நறைசெய் மணம் வீசும்; பொழில் சோலைகளையுடைய; மழை மழை பொழியும்; தவழும் மேகங்கள் தவழும்; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக