PT 5.10.1

தயிருண்டநாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்

1438 தீதறுநிலத்தொடுஎரிகாலினொடு நீர்க்கெழுவிசும்புமவையாய் *
மாசறுமனத்தினொடுஉறக்கமொடிறக்கை யவையாயபெருமான் *
தாய்செறஉளைந்துதயிருண்டுகுடமாடு தடமார்வர், தகைசேர் *
நாதன்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம்நண்ணுமனமே! (2)
PT.5.10.1
1438 ## tītu aṟu nilattŏṭu ĕri kāliṉŏṭu * nīr kĕzhu
vicumpum avai āy *
mācu aṟu maṉattiṉŏṭu uṟakkamŏṭu iṟakkai * avai
āya pĕrumāṉ **
tāy cĕṟa ul̤aintu tayir uṇṭu kuṭam āṭu * taṭa
mārvar takaicer *
nātaṉ uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram
-naṇṇu maṉame-1

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1438. Our lord is the faultless earth, fire, wind, water, and the high sky, our faultless mind, sleep and Mokshā. When he stole butter and his mother Yashodā became angry and hit him, he was not worried. O heart! Think of going to Nandipuravinnagaram where our good lord with a broad chest stays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீது ஆறு குற்றமற்ற; நிலத்தொடு எரி பூமியும் அக்நியும்; காலினொடு நீர் வாயுவும் ஜலமும்; கெழு இவற்றுகெல்லாம் இடம் கொடுக்கும்; விசும்பும் ஆகாசமும்; அவையாய் ஆகியவற்றிற்கு அந்தராத்மாவாய்; மாசு அறு குற்றமற்ற; மனத்தினொடு மனதுடன்; உறக்கமொடு உறக்கம் ஸ்வப்னம்; இறக்கை மரணம்; அவை ஆய ஆகியவற்றையும்; பெருமான் நியமிப்பவனான பெருமான்; தாய் தாயாகிய யசோதை; செற சீறித் தாம்பெடுக்க; உளைந்து அதற்கு பயந்திருப்பவன் போல்; தயிர் உண்டு தயிர் உண்டு; குடம் ஆடு குடக்கூத்தாடினவனும்; தடமார்வர் விசாலமான மார்பையுடையவனும்; தகைசேர் கல்யாணகுண பூர்ணனான; நாதன் பெருமான்; உறைகின்ற நகர் இருக்கும் நகர்; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக