PT 4.3.1

திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்

1268 பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும்
பேரருளாளன்எம்பிரானை *
வாரணிமுலையாள்மலர்மகளோடு
மண்மகளும்உடன்நிற்ப *
சீரணிமாடநாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
காரணிமேகம்நின்றதொப்பானைக்
கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே. (2)
PT.4.3.1
1268 ## per aṇintu ulakattavar tŏzhutu ettum *
per arul̤āl̤aṉ ĕm pirāṉai *
vār aṇi mulaiyāl̤ malar-makal̤oṭu *
maṇ-makal̤um uṭaṉ niṟpa **
cīr aṇi māṭa nāṅkai nal naṭuvul̤ *
cĕmpŏṉcĕykoyiliṉul̤l̤e *
kār aṇi mekam niṉṟatu ŏppāṉaik *
kaṇṭukŏṇṭu uyntŏzhinteṉe-1

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1268. I saw and bowed to the generous cloud-colored god who, worshiped and praised by the people of the world, stays with Lakshmi adorned with lovely ornaments on her breasts and with the earth goddess in Chemponseykoyil in Thirunāngai filled with beautiful palaces shining like gold and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகத்தவர் இவ்வுலகிலுள்ளோர் அனைவரும்; பேர் அணிந்து நாம ஸங்கீர்த்தனம் செய்து; தொழுது ஏத்தும் வணங்கி துதிக்கும்படி; பேர் அருளாளன் பேர் அருளாளனாக; எம் பிரானை இருக்கும் எம்பிரானை; கார் அணி மேகம் மேகம் போல்; நின்றது ஒப்பானை நின்ற பெருமானை; சீர் அணி அழகு பொருந்திய; மாட மாடங்களையுடைய; நாங்கை நல் திருநாங்கூரின்; நடுவுள் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய்கோயில் என்னும்; கோயிலின் உள்ளே கோயிலின் உள்ளே; வார் அணி முலையாள் கச்சணிந்த மாதர்கள்; மலர் மகளோடு திருமகளோடும்; மண் மகளும் மண் மகளோடும்; உடன் நிற்ப கூடியிருக்க; கண்டு கொண்டு கண்டு கொண்டு வணங்கி; உய்ந்தொழிந்தேனே வாழ்ந்து போனேன்
ulagaththavar all the residents of the world; pĕr aṇindhu gather as a huge crowd; thozhudhu surrender; ĕththum one who remains to be praised; pĕr arul̤āl̤an (on them) one who gives boundless mercy; kār seen in rainy season; aṇi ninṛadhu beautiful; mĕgam oppānai one who is similar to a cloud; em pirānai being our benefactor; vār aṇi tied up by a corset; mulaiyāl̤ having bosoms; malar magal̤ŏdu with periya pirāttiyār who was born in flower and is eternally youthful; maṇ magal̤um and ṣrī bhūmip pirātti; udan niṛpa while they stand together; sīr having wealth; aṇi beautiful; mādam having mansions; nāngai in thirunāngūr; nal naduvul̤ present in the good central location; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; kaṇdu koṇdu enjoyed with my eyes; uyndhu enlivened; ozhindhĕn became satisfied