PT 3.8.9

தேவர்கள் பணியும் மணிமாடக்கோயிலை வணங்கு

1226 விடையோடவென்றுஆய்ச்சிமெந்தோள்நயந்த
விகிர்தா! விளங்குசுடராழியென்னும் *
படையோடுசங்கொன்றுஉடையாய்! எனநின்று
இமையோர்பரவும்இடம் * பைந்தடத்துப்
பெடையோடுசெங்காலஅன்னம்துகைப்பத்
தொகைப்புண்டரீகத்திடைச்செங்கழுநீர் *
மடையோடநின்றுமதுவிம்மு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.9
1226 viṭai oṭa vĕṉṟu āycci mĕṉ tol̤ nayanta *
vikirtā vil̤aṅku cuṭar āzhi ĕṉṉum *
paṭaiyoṭu caṅku ŏṉṟu uṭaiyāy ĕṉa niṉṟu *
imaiyor paravum iṭam ** pain taṭattup
pĕṭaiyoṭu cĕṅ kāla aṉṉam tukaippat *
tŏkaip puṇṭarīkattiṭaic cĕṅkazhunīr *
maṭai oṭa niṉṟu matu vimmu nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1226. The lord is worshiped and praised by the gods in the sky saying, “You carry a shining discus and a conch. You fought with seven bulls to marry the cowherd girl Nappinnai and embraced her arms. ” He stays in Manimādākkoyil in Thirunāngur where a red-legged swan stays with his mate in a beautiful pond and they play among the lotuses so their pollen falls on beautiful kazhuneer flowers and the honey from the flowers drips and falls into the channel. O heart, go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடை ஓட ஏழு ரிஷபங்களும் ஓடி அழியும்படி; வென்று அவைகளை வென்று; ஆய்ச்சி நப்பின்னையின்; மென் தோள் மென்மையான தோள்களை; நயந்த அணைக்க விரும்பிய; விகிர்தா! விலக்ஷணமானவனே!; விளங்கு சுடர் ஒளியோடு விளங்கும்; ஆழி என்னும் சக்ராயுதத்தையும்; படையோடு சங்கு ஒன்று ஒப்பற்ற சங்கையும்; உடையாய்! உடையவனே!; என நின்று என்று சொல்லிக்கொண்டு; இமையோர் தேவர்கள்; பரவும் இடம் துதிசெய்யுமிடமாய்; பைந் தடத்து அழகிய தடாகத்திலே; பெடையோடு பெடையோடு கூடின; செங்கால சிவந்த கால்களையுடைய; அன்னம் அன்னப் பறவை; துகைப்ப ஏறி துகைப்ப; தொகை துகைப்பதால் திரளான; புண்டரீகத்து தாமரை பூக்களின்; இடை செங்கழுநீர் நடுவிலிருந்த செங்கழுநீர் பூக்கள்; மடை ஓட மடைகள் நிறம்பி ஓடின போதிலும்; நின்று மது உள்ளே நின்று மது வெள்ளம்; விம்மும் நாங்கூர் தேங்கும்படியான நாங்கூர்; மணிமாடக்கோயில் மணிமாடக்கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
vidai seven bulls; ŏda to run away and die; venṛu winning (those); āychchi nappinnaip pirātti-s; men thŏl̤ embracing of tender shoulders; nayandha desired; vigirdhā ŏh one who has distinguished acts!; vil̤angu shining; sudar having radiance; āzhi ennum padaiyŏdu with the weapon thiruvāzhi (divine chakra); onṛu sangu udaiyāy ŏh one who has the distinguished ṣrī pānchajanyam!; ena ninṛu saying this; imaiyŏr dhĕvathās such as brahmā et al; paravum continuously praising; idam being the abode; pedaiyŏdu with female swan; sem kāla having reddish feet; annam swan (due to drinking honey, being unable to see next steps); paim thadaththu in the beautiful pond; thogaip puṇdarīkam gathered lotus flowers; thugaippa as they stomp (due to that); idai present in between those lotus flowers; sengazhunīr sengazhunīr flowers [purple īndian water lily]; madai ŏda though the canals are filled and flowing; ninṛu madhu vimmum the flood of honey from inside is flowing; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender