PT 3.7.9

நெடுமாலும் என் மகளும் ஆலி புகுவரோ?

1216 காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப்பாவை யொப்பாள் *
பாவியேன் பெற்றமையால் பணைத்தோளிபரக்கழிந்து *
தூவிசேரன்னமன்னநடையாள் நெடுமாலொடும் போய் *
வாவியந்தண்பணைசூழ் வயலாலி புகுவர்கொலோ?
PT.3.7.9
1216 kāvi am kaṇṇi ĕṇṇil * kaṭi mā malarp pāvai ŏppāl̤ *
pāviyeṉ pĕṟṟamaiyāl * paṇait tol̤i parakkazhintu **
tūvi cer aṉṉam aṉṉa naṭaiyāl̤ * nĕṭumālŏṭum poy *
vāvi am taṇ paṇai cūzh * vayal āli pukuvarkŏlo?-9

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1216. Her mother says, “She is as lovely as Lakshmi on a fragrant lotus and her eyes are as beautiful as kāvi flowers. She has round bamboo-like arms and walks like a white-feathered swan. She went with Nedumāl. Will the village gossip about her? Will they go to Vayalāli (Thiruvāli) surrounded with rich fields and cool ponds? Is she doing all this because I am her poor mother and gave birth to her?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவி அம் காவி போன்று அழகிய; கண்ணி கண்களையுடையவளும்; எண்ணில் எண்ணிப்பார்க்கையில்; கடி மா மலர்ப் பாவை மஹாலக்ஷ்மிக்கு; ஒப்பாள் ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும்; தூவி சேர் அன்னம் இறகையுடைய அன்னப்பேடையின்; அன்ன நடைபோன்ற; நடையாள் நடையையுடையவளும்; பணை மூங்கில் போன்ற; தோளி தோள்களையுடையவளுமான என் மகள்; பாவியேன் பாவியான என்வயிற்றில்; பெற்றமையால் பிறந்த குற்றத்தினால்; பரக்கழிந்து பெரும்பழிக்கு இலக்காகி; நெடுமாலொடும் எம்பெருமானுடன்; போய் கூடச் சென்று; வாவி அம் தண் அழகிய குளிர்ந்த; பணை சூழ் தடாகங்கள் சூழ்ந்த; வயல் ஆலி வயல்களையுடைய திருவாலியில்; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
kāvi am kaṇṇi having beautiful eyes resembling kāvi flower; eṇṇil if we analyse; kadi mā malar living in very fragrant lotus flower; pāvai oppāl̤ one who is matching periya pirāttiyār; thūvi sĕr having wings; annam anna matching a swan-s; nadaiyāl̤ having the gait; paṇaith thŏl̤i my daughter who is having bamboo like shoulder; pāviyĕn me, the sinner; peṝamaiyāl due to the defect of giving birth to her; parakku azhindhu without even a little bit of shame; nedumālodum with the one who has great love; pŏy going alone; vāvi ponds; thaṇ ambaṇai cool water bodies; sūzh surrounded fully; vayal having abundant crops; āli in thiruvāli; puguvarkolŏ will they enter?