PT 3.4.7

சேர்தற்குரிய இடம் காழியே

1184 பொருவில்வலம்புரியரக்கன்முடிகள்பத்தும்
புற்றுமறிந்தனபோலப்புவிமேல்சிந்த *
செருவில்வலம்புரிசிலைக்கைமலைத்தோள்வேந்தன்
திருவடிசேர்ந்துய்கிற்பீர்! * திரைநீர்த்தெள்கி
மருவிவலம்புரிகைதைக்கழியூடாடி
வயல்நண்ணிமழைதருநீர்தவழ்கால்மன்னி *
தெருவில்வலம்புரிதரளம்ஈனும் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.7
1184 pŏru il valam puri arakkaṉ muṭikal̤ pattum * puṟṟu maṟintaṉa polap puvimel cinta *
cĕruvil valam puri cilaik kai malait tol̤ ventaṉ * tiruvaṭi cerntu uykiṟpīr tirai nīrt tĕl̤ki **
maruvi valampuri kaitaik kazhi ūṭu āṭi * vayal naṇṇi mazhai taru nīr tavazh kāl maṉṉi *
tĕruvil valampuri taral̤am īṉum * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-7 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1184. Our lord who went to Lankā, fought with his arrows and made the ten heads of king Rāvana fall to the earth, so the place looked like a broken, scattered anthill, stays in ShriRāmavinnagaram in Sheerkāzhi where the rain water in the channels carries curved conches and moves through screw pine plants and fields and those conches give birth to pearls on the streets. O devotees, go to the temple in Sheerkāzhi and worship the feet of the lord with a heroic bow and a conch.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொரு இல் ஒப்பில்லாத; வலம்புரி வலிமையைக் கொண்ட; அரக்கன் அரக்கன் ராவணனின்; முடிகள் பத்தும் தலைப் பத்தும்; புற்று புற்று; மறிந்தன போல சரியுமாபோலே; புவிமேல் சிந்த பூமியில் விழ; செருவில் வலம் புரி யுத்தத்தில் வெற்றி தரும்; சிலை வில்லுடைய; கை மலை கையும் மலை போன்ற; தோள் தோள்களையும்; வேந்தன் உடைய ராமனின்; திருவடி சேர்ந்து பாதங்களைப் பற்ற; உய்கிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; வலம்புரி வலம்புரி சங்குகள்; திரை நீர்த் அலைகடலை விட்டு; தெள்கி மருவி சீர்காழி வந்து சேர்ந்து; கைதை கழி தாழைகள் நிறைந்த கழிகள்; ஊடு ஆடி நடுவே ஆடி ஆடி; வயல் நண்ணி வயல்களை அடைந்து; மழை தரு மழைநீர்; நீர் தவழ் பெருகி வரும்; கால் வாய்க்கால்கள் மூலமாக; தெருவில் மன்னி வீதிகளிலே வந்து சேர்ந்து; வலம்புரி வலம்புரி சங்குகளையும்; தரளம் முத்துக்களையும்; ஈனும் பெற்று தருகிற; காழிச் காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
poru il matchless; valam puri having strength; arakkan rāvaṇa-s; mudigal̤ paththum ten heads; puṝu maṛindhana pŏla just as a destroyed ant-hill will appear; puvi mĕl on earth; sindha as they were scattered; seruvil in battle; valam victory; puri having ability to grant; silai holding ṣrī gŏdhaṇdam (bow); kai hand; malai mountain like; thŏl̤ having shoulders; vĕndhan the prince, perumāl̤-s; thiruvadi lotus feet; sĕrndhu reach; uygiṛpīr oh you who desire to be liberated!; valam puri conches; thirai ocean which has tides; nīrththu left; el̤gi becoming weak; kaidhaik kazhi salt-pan which is having thāzhai [wild plant found on sea shores]; maruvi reached; ūdu in the middle of the salt-pan; ādi roaming here and there; vayal (subsequently) in fertile fields; naṇṇi entered; mazhai tharu nīr rain water; thavazh falling; kāl through canals; theruvil manni entered the streets (once the water drained); valam puri conches; tharal̤am pearls; īnum giving birth; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender