PT 3.4.6

இராமபிரானுக்குரிய காழி சேருங்கள்

1183 பைங்கண்விறல்செம்முகத்துவாலிமாளப்
படர்வனத்துக்கவந்தனொடும், படையார்திண்கை *
வெங்கண்விறல்விராதனுகவிற்குனித்த
விண்ணவர்க்கோன்தாளணைவீர்! * வெற்புப்போலும்
துங்கமுகமாளிகைமேல்ஆயங்கூறும்
துடியிடையார்முகக்கமலச்சோதிதன்னால் *
திங்கள்முகம்பனிபடைக்கும்அழகார் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.6
1183 paiṅ kaṇ viṟal cĕm mukattu vāli māl̤ap * paṭar vaṉattuk kavantaṉŏṭum paṭai ār tiṇ kai *
vĕm kaṇ viṟal virātaṉ uka vil kuṉitta * viṇṇavar-koṉ tāl̤ aṇaivīr vĕṟpuppolum **
tuṅka muka māl̤ikai mel āyam kūṟum * tuṭi iṭaiyār mukak kamalac coti-taṉṉāl *
tiṅkal̤ mukam paṉi paṭaikkum azhaku ār * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-6 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1183. As Rāma our god who shot his arrows, fought with strong, red-faced Vāli, the king of the monkeys, conquered the army of Kavandan and killed cruel-eyed Virādan. He stays in beautiful ShriRāmavinnagaram where women with waists like tudi drums and lotus faces stay with their friends in the shining palaces that are tall as mountains and where the moon sweating with drops of dew looks like a woman’s lotus face. O devotees, go and worship the feet of the god of the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பைங் கண் பசுமையான கண்களும்; விறல் மிடுக்கையுடைய; செம் முகத்து கோபத்தால் சிவந்த; வாலி மாள வாலி மாள; படர் வனத்து பரந்த காட்டிலுள்ள; கவந்தனொடும் கபந்தன் முடியும்படியும்; படை ஆர் திண் கை ஆயுதங்களையுடைய கைகளையும்; வெம் கண் உக்ரமான கண்களையும்; விறல் மிடுக்கையுமுடைய; விராதன் உக விராதனென்னும் அரக்கன் முடிய; வில் குனித்த வில்லை வளைத்த; விண்ணவர் கோன் எம்பெருமானின்; தாள் தாள் பற்ற; அணைவீர்! விரும்பும் அன்பர்களே!; வெற்புப் போலும் மலை போன்று; துங்க முக உயர்ந்த முகமுடைய; மாளிகை மேல் மாளிகை மேல் நின்று; ஆயம் கூறும் பேசிக் கொண்டிருக்கும்; துடி இடையார் நுண்ணிய இடையுடைய; முக பெண்களின் முகம்; கமல தாமரை போன்ற முகத்தின்; சோதி தன்னால் காந்தியினாலே; திங்கள் முகம் சந்திரனுடைய முகத்திலே; பனி படைக்கும் பனி போன்ற நீர் சிந்தும்; அழகு ஆர் அழகு நிறம்பிய; காழிச் காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
paingaṇ greenish eyes; viṛal strength; semmugam having reddish face (due to fear); vāli the monkey named vāli; māl̤a to die; padar vast; vanaththu present in the forest; kavandhanodum rākshasa named kabandha; thiṇ firm; padai weapons; ār filled; kai hands; vem kaṇ fierce eyes; viṛal victorious; virādhan rākshasa named virādhan; uga to die; vil kuniththa one who bent his bow; viṇṇavar kŏn chakravarthith thirumagan, who is the lord of lords, his; thāl̤ divine feet; aṇaivīr oh you who desire to reach!; veṛpup pŏlum like mountains; thungam tall; mugam having front elevation; māl̤igai mansions-; mĕl standing atop; āyam kūṛum calling out in a friendly manner; thudi like udukkai (a percussion instrument which is slim in the middle); idaiyār women who are having waist; mugak kamalam lotus like faces-; sŏdhi thannāl by the radiance; thingal̤ (roaming in the sky) moon-s; mugam face; pani tears (caused by sorrow); padaikkum having continuously; azhagu ār filled with beauty; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender