PT 3.4.1

பக்தர்களே! சீகாழிப் பதி சேருங்கள்

1178 ஒருகுறளாய் இருநிலம்மூவடிமண்வேண்டி
உலகனைத்தும்ஈரடியாலொடுக்கி * ஒன்றும்
தருகவெனாமாவலியைச்சிறையில்வைத்த
தாடாளன்தாளணைவீர்! * தக்ககீர்த்தி
அருமறையின்திரள்நான்கும்வேள்வியைந்தும்
அங்கங்கள்அவையாறும் இசைகளேழும் *
தெருவில்மலிவிழாவளமும்சிறக்கும் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே. (2)
PT.3.4.1
1178 ## ŏru kuṟal̤ āy iru nilam mūvaṭi maṇ veṇṭi * ulaku aṉaittum īr aṭiyāl ŏṭukki ŏṉṟum *
taruka ĕṉā māvaliyaic ciṟaiyil vaitta * tāṭāl̤aṉ tāl̤ aṇaivīr takka kīrtti **
aru maṟaiyiṉ tiral̤ nāṉkum vel̤vi aintum * aṅkaṅkal̤ avai āṟum icaikal̤ ezhum *
tĕruvil mali vizhā val̤amum ciṟakkum * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-1 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1178. The one and only Lord who went to Mahabali’s sacrifice as a dwarf, took three feet of land from the king, measured the earth and the sky with his two feet and kept the king as his slave stays in ShriRāmavinnagaram where reciters of the four Vedās and the six Upanishads perform the five sacrifices and the people sing the seven kinds of music and celebrate many festivals on the streets. Go to that temple and worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு குறள் ஆய் ஒப்பாற்ற வாமநரூபியாய்; இரு நிலம் இந்த பரந்த பூமியில்; மூவடி மண் மூவடி நிலத்தை; வேண்டி மாத்திரம் யாசித்து; உலகு அனைத்தும் உலகு அனைத்தும்; ஈரடியால் ஈரடியால்; ஒடுக்கி ஒன்றும் அளந்து மூன்றாமடிக்கு; தருக எனா நிலம் தருக என; மாவலியை மகாபலியை; சிறையில் வைத்த பாதாள சிறையில் வைத்த; தாடாளன் பெருமை பொருந்திய; தாள் பெருமானின் பாதங்களை; அணைவீர்! அணைய விரும்பும் அன்பர்களே!; தக்க கீர்த்தி அவனுக்குத் தக்க கீர்த்தியுடைய; அரு மறையின் திரள் நாங்கும் அரிய வேதங்கள் நான்கும்; வேள்வி ஐந்தும் வேள்வி ஐந்தும்; அங்கங்கள் அவை ஆறும் வேதாங்கங்கள் ஆறும்; இசைகள் ஏழும் ஏழுஸ்வரங்களும்; தெருவில் மலி வீதி நிறைந்த; விழா வளமும் உத்ஸவவைபவங்களும்; சிறக்கும் சிறப்பு மிக்க; காழி காழியென்னும் க்ஷேத்திரத்தில்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
oru unique; kuṛal̤āy assuming the form of dwarf, vāmana (went to mahābali); iru nilam in the vast earth; mūvadi maṇ three steps of land; vĕṇdi begged; ulaganaiththum all the worlds; īradiyāl with two steps; odukki subdued; onṛum with another step; tharuga enā asking to give; māvaliyai mahābali; siṛaiyil vaiththa one who placed him in the prison of pāthāl̤am (nether world), his; thādāl̤an the supreme lord-s; thāl̤ divine feet; aṇaivīr ŏh you who desire to attain!; thakka matching his; kīrthi having greatness; aru difficult to know the meanings; maṛaiyin vĕdhams-; thiral̤ collections; nāngum four; aindhu vĕl̤viyum the five great yagyas (sacrifices); āṛu angangal̤um ancillaries such as vyākaraṇam etc; ĕzhu isaigal̤um seven svarams (musical tunes); mali having in abundance; vizhā festivals-; val̤amum beauty; siṛakkum to grow further; theruvin streets-; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender