PT 3.10.8

குடமாடு கூத்தனின் இடம் அரிமேய விண்ணகரம்

1245 கன்றதனால்விளவெறிந்துகனியுதிர்த்தகாளை
காமருசீர்முகில்வண்ணன், காலிகள்முன்காப்பான் *
குன்றதனால்மழைதடுத்துக்குடமாடுகூத்தன்
குலவும்இடம், கொடிமதிள்கள்மாளிகை கோபுரங்கள் *
துன்றுமணிமண்டபங்கள்சாலைகள் தூமறையோர்
தொக்குஈண்டித்தொழுதியொடுமிகப்பயிலும் சோலை *
அன்றுஅலர்வாய்மதுவுண்டுஅங்குஅளிமுரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.8
1245 kaṉṟu-ataṉāl vil̤avu ĕṟintu kaṉi utirtta kāl̤ai *
kāmaru cīr mukil vaṇṇaṉ kālikal̤ muṉ kāppāṉ *
kuṉṟu-ataṉāl mazhai taṭuttu kuṭam āṭu kūttaṉ *
kulavum iṭam-kŏṭi matil̤kal̤ māl̤ikai kopuraṅkal̤ **
tuṉṟu maṇi maṇṭapaṅkal̤ cālaikal̤ * tū maṟaiyor
tŏkku īṇṭit tŏzhutiyŏṭu mikap payilum colai *
aṉṟu alarvāy matu uṇṭu aṅku al̤i muralum nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-8

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1245. The dark cloud-colored god, as strong as a bull, who killed the Asurans Vatsāsuran and Kabithāsuran when they came as a calf and a vilām tree, and who protected the cows and the cowherds from the storm using Govardhanā mountain as an umbrella and who danced on a pot stays happily in the beautiful Arimeyavinnagaram temple in Nāngur with walls where flags fly, filled with palaces, towers, mandapams studded with diamonds and wide paths and lovely groves where bees drink honey from flowers that have just opened and sing. O heart, let us go to that temple and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்று அதனால் கன்றான வத்ஸாசுரனைக் கொண்டு; விளவு எறிந்து விளாங்காயான கபித்ஸாசுரனை எறிந்து; கனி உதிர்த்த பழங்கள் உதிரும்படி பண்ணின; காளை காளையாய்; காமரு சீர் அனைவரும் விரும்பும்; முகில் வண்ணன் காள மேக வண்ணனாய்; காலிகள் முன் காப்பான் பசுக்களைக்காப்பாற்ற; குன்று அதனால் மலையைத் தூக்கி; மழை தடுத்து மழையைத் தடுத்து; குடம் ஆடு கூத்தன் குடகூத்தாடினவன்; குலவும் இடம் கொண்டாடி இருக்குமிடம்; கொடி மதிள்கள் கொடியையுடைய மதிள்களையும்; மாளிகை மாளிகைகளையும்; கோபுரங்கள் கோபுரங்களையும்; துன்று மணி நெருங்கின மணிமயமான; மண்டபங்கள் மண்டபங்களையும்; சாலைகள் யாக சாலைகளையும்; தூ மறையோர் பரிசுத்தமான வைதிகர்கள்; தொக்கு ஈண்டித் கூட்டங்கள் கூடியதால்; தொழுதியொடு உண்டான ஆரவாரம் மிகுந்திருப்பதால்; மிகப் பயிலும் நெருக்கமான; சோலை சோலையிலுண்டான; அன்று அலர் வாய் அன்று அலர்ந்த செவ்விப் பூவில்; மது உண்டு அங்கு அளி தேனைப் பருகும் அவ்விடத்தில்; முரலும் ரீங்காரம் பண்ணும்; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
kanṛu adhanāl With vathsāsuran (demon in the form of a calf); vil̤avu eṛindhu knocking down the demon who stood as the wood apple; kani its fruit; udhirththa made it fall; kāl̤ai being ever youthful; kāmaru being desired by all; sīr beautiful; mugil vaṇṇan having beautiful form like that of a dark cloud; mun previously; kāligal̤ cows; kāppān to protect; kunṛu adhanāl with mountain; mazhai rain; thaduththu stopped; kudam ādu kūththan one who danced with pots; kulavum idam abode where he is joyfully residing; kodi having flags; madhil̤gal̤ compound walls(around forts); māl̤igai mansions; gŏburangal̤ towers; thunṛu dense; maṇi filled with gems; maṇdabangal̤ halls; sālaigal̤ having sacrificial arenas too; thū very pure; maṛaiyŏr brāhmaṇas; thokku īṇdi due to gathering in groups; thozhudhiyŏdu being abundant with tumultuous noise; migap payilum very dense; sŏlai present in the gardens; madhu uṇdu drinking the honey; angu in that place; al̤i beetles; muralum humming; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.