PT 2.7.5

பிரானே! உன்னை நினைந்து உருகுகிறாள் என் மகள்

1112 ஓதிலும்உன்பேரன்றிமற்றோதாள்
உருகும்நின்திருவுருநினைந்து *
காதன்மைபெரிது கையறவுடையள்
கயல்நெடுங்கண்துயில்மறந்தாள் *
பேதையேன்பேதை பிள்ளைமைபெரிது
தெள்ளியள்வள்ளிநுண்மருங்குல் *
ஏதலர் முன்னாஎன்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
PT.2.7.5
1112 ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் * உருகும் நின் திரு உரு நினைந்து *
காதன்மை பெரிது கையறவு உடையள் * கயல் நெடுங் கண் துயில் மறந்தாள் **
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது * தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் *
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 5
1112 otilum uṉ per aṉṟi maṟṟu otāl̤ * urukum niṉ tiru uru niṉaintu *
kātaṉmai pĕritu kaiyaṟavu uṭaiyal̤ * kayal nĕṭuṅ kaṇ tuyil maṟantāl̤ **
petaiyeṉ petai pil̤l̤aimai pĕritu * tĕl̤l̤iyal̤ val̤l̤i nuṇ maruṅkul *
etalar muṉṉā ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe-5

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1112. Even when she speaks, it is only Your name, she will not utter anything else. Melting in heart as she remembers Your divine form, her love grows deeper by the moment. She stands bewildered, like one who has lost her only treasure. Her long, fish-like eyes have forgotten sleep. Though still a child, my foolish daughter has a rare and steady love for You. Slender-waisted, like a tender creeper, she suffers in front of those who mock her pain. O Lord of Thiruvidavendhai, what are You thinking?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஓதிலும் வாய்விட்டு எதைச் சொன்னாலும்; உன் பேர் அன்றி உனது திருநாமம் தவிர; மற்று ஓதாள் வேறொன்றையும் சொல்லுவதில்லை; திரு உரு நினைந்து உன் அழகை நினைத்து; உருகும் நின் உருகுகிறாள்; காதன்மை உன் விஷயத்தில்; பெரிது ஆசை பெருகுகின்றது; கையறவு கைப் பொருளை இழந்தவர் போல்; உடையள் திகைக்கிறாள்; கயல் கயல்மீன் போன்று; நெடுங் கண் நீண்ட கண்களிலே; துயில் மறந்தாள் தூக்கத்தை மறந்தாள்; பேதையேன் மிகவும் சபலையான; பேதை என் பெண்ணின்; பிள்ளைமை சிறுபிள்ளைத்தனம்; பெரிது பெரிது என்றாலும்; வள்ளி உன் விஷயத்தில்; தெள்ளியள் தெளிவுள்ளவளாயிருக்கிறாள்; நுண் நுண்ணிய; மருங்குல் இடையையுடைய இவளைபற்றி; ஏதலர் முன்னா விரும்பாதவர்கள் முன்பாக; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
idavendhai endhai pirānĕ! ŏh my lord in thiruvidavendhai!; ŏdhilum While speaking; un pĕr anṛi other than your name; maṝu anyone else-s name; ŏdhāl̤ will not say;; nin your; thiruvuru physical beauty; ninaindhu thinking about; urugum she is melting;; kādhanmai desire (in your matter); peridhu is growing more and more; (due to that); kaiyaṛavu udaiyal̤ she is anguishing like the one who has lost her belonging;; kayal kayal (carp) fish like; nedu very wide; kaṇ in the eyes; thuyil having sleep; maṛandhāl̤ forgotten;; pĕdhaiyĕn pĕdhai my very desirous daughter-s; pil̤l̤aimai childishness; peridhu is big; (on your matter); thel̤l̤iyal̤ she is having great clarity;; val̤l̤i like a creeper; nuṇ slender; marungul she who is having waist; ĕdhalar munnā in front of those who don-t like; en ninanidhirundhāy What are you thinking to do?

Āchārya Vyākyānam

அந்ய பரையாக வைத்து மறப்பிக்க மாட்டீர்களோ என்ன அதுக்கு பதில் இந்த பாசுரம்

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள் பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

பேதையன் பேதை –சபலமான என் பெண்ணும் சபலை பிள்ளைமை

+ Read more