PT 2.6.9

சிவனோடு வாழும் திருமால் பக்தரை வணங்கு

1106 பிணங்களிடுகாடதனுள் நடமாடுபிஞ்ஞகனோடு *
இணங்குதிருச்சக்கரத்து எம்பெருமானார்க்குஇடம் * விசும்பில்
கணங்களியங்கும்மல்லைக் கடல்மல்லைத்தலசயனம் *
வணங்குமனத்தாரவரை வணங்குஎன்தன் மடநெஞ்சே!
PT.2.6.9
1106 piṇaṅkal̤ iṭu kāṭu-ataṉul̤ * naṭam āṭu piññakaṉoṭu
iṇaṅku tiruc cakkarattu * ĕm pĕrumāṉārkku iṭam vicumpil
kaṇaṅkal̤ iyaṅkum mallaik * kaṭalmallait talacayaṉam
vaṇaṅkum maṉattār-avarai * vaṇaṅku ĕṉ-taṉ maṭa nĕñce-9

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1106. O my ignorant heart! Worship the devotees of him who carries a divine discus in his hands and keeps Shivā, dancer on the burning ground on his left side. He rests on Adisesha on the ocean in Kadalmallai Thalasayanam where the gods in the sky come and worship him happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிணங்கள் இடு காடு பிணங்களைச் சுடுகிற; அதனுள் சுடுகாட்டிலே; நடம் ஆடு பிஞ்ஞகனோடு நடனமாடுகின்ற சிவனுக்கும்; திருச்சக்கரத்து சக்கரத்துக்கும்; இணங்கு தன் உடலின் ஒரு பகுதியை தந்துள்ள; எம் பெருமானார்க்கு இடம் எம்பெருமானுக்கு இடமானது; விசும்பில் கணங்கள் ஸ்வர்க்கத்தில் தேவ கணங்கள்; இயங்கும் மல்லை வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான; கடல் மல்லைத் தலசயனம் கடல் மல்லைத் தலசயனத்தை; வணங்கும் மனத்தார் வணங்கும் மனமுடைய; அவரை வணங்கு அடியவர்களை வணங்கு; என் தன் மட நெஞ்சே! என் தன் மட நெஞ்சே!
piṇangal̤ burning the corpses; idu kādu adhanul̤ in the cremation ground; nadam ādu one who dances; pinjaganŏdu with rudhra who is the destroyer; iṇangu fitting well; thiruchchakkaraththu having thiruvāzhi āzhwān (sudharṣana chakram); emperumānārkku for my lord; idam being the abode; visumbil present in the abodes such as heaven; gaṇangal̤ groups of dhĕvathās [celestial entities]; iyangum coming and worshipping; mallai having greatness; kadal mallaith thala sayanam sthalasayanam in thirukkadalmallai; vaṇangu manaththāravarai those who have the heart to worship; enṛan mada nenjĕ vaṇangu ŏh my humble mind! ẏou worship.