PT 2.6.5

மனமே! தலசயனம் தொழுவாரையே விரும்பு

1102 பிச்சச்சிறுபீலிச் சமண்குண்டர்முதலாயோர் *
விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப்பணியாதே *
கச்சிக்கிடந்தவனூர் கடல்மல்லைத்தலசயனம் *
நச்சித்தொழுவாரை நச்சுஎன்தன்நன்நெஞ்சே!
PT.2.6.5
1102 piccac ciṟu pīlic * camaṇ kuṇṭar mutalāyor
viccaikku iṟai ĕṉṉum * av iṟaiyaip paṇiyāte
kaccik kiṭantavaṉ ūr * kaṭalmallait talacayaṉam
naccit tŏzhuvārai * naccu ĕṉ taṉ nal nĕñce-5

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1102. O my good heart! Praise and love the devotees who do not worship god of the Jains who carry an umbrella and a small peacock feather. Only love and worship our lord of Kachi in Kadalmallai Thalasayanam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிச்சச் சிறு பீலி சிறிய மயிலிறகு விசிறியையுடைய; சமண் குண்டர் முதலாயோர் சமணர் முதலானவர்கள்; விச்சைக்கு ஸகல வித்யைகளுக்கும்; இறை என்னும் ஒருவன் தலைவன்; அவ் இறையைப் அந்த சமணத் தலைவனை; பணியாதே பணியாமல்; கச்சிக் கிடந்தவன் திருவெஃகாவில் இருக்கும்; ஊர் பெருமானது ஊர்; கடல் மல்லை கடல் மல்லை; தலசயனம் தலசயனத்தில் இருக்கும்; நச்சித் பெருமானை விரும்பி; தொழுவாரை தொழுகின்றவர்களை; என் தன் நல் நெஞ்சே! எனது நல்ல நெஞ்சமே!; நச்சு நீ விரும்பித்தொழு
pichcham bunch of peacock wings; siṛu small; peeli having peacock feather; samaṇ guṇdar the lowly amaṇas (jainas); mudhalāyŏr et al; vichchaikku for all knowledge; iṛai ennum will have someone as the controller;; avviṛaiyai such person who is established by them; paṇiyādhu without surrendering unto; kachchi in thiruvehkā; kidandhavan one who is mercifully reclining in; ūr the abode (where emperumān arrived for the sake of his devotee, puṇdarīka); kadal mallaith thala sayanam (mercifully reclining) in sthalasayanam in thirukkadalmallai; nachchi desiring; thozhuvārai those who worship; endhan my; nenjĕ ŏh mind!; nachchu (you too) desire and worship