PT 2.6.4

தலசயனரைக் கொண்டாடுவோரே எம் குலதெய்வம்

1101 விண்டாரைவென்று ஆவிவிலங்குண்ண * மெல்லியலார்
கொண்டாடும்மல்லகலம் அழலேறவெஞ்சமத்துக்
கண்டாரை * கடல்மல்லைத்தலசயனத்துஉறைவாரை *
கொண்டாடும்நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வமே.
PT.2.6.4
1101 viṇṭārai vĕṉṟu āvi * vilaṅku uṇṇa mĕl iyalār
kŏṇṭāṭum mal akalam * azhal eṟa vĕm camattuk
kaṇṭārai kaṭalmallait * talacayaṉattu uṟaivārai
kŏṇṭāṭum nĕñcu uṭaiyār * avar ĕṅkal̤ kulatĕyvame-4

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1101. The devotees are our family gods who worship in their hearts the god of Kadalmallai Thalasayanam who heroically fought a cruel war, defeated his enemies and left their bodies for animals to eat as the warriors’ bodies that had been loved by their wives were burned.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்டாரை வென்று சத்துருக்களை தோற்கடித்து; ஆவி விலங்கு அவர்களுடைய உடலை நாய் நரி; உண்ண உண்ணவும்; மெல் இயலார் ம்ருது ஸ்வபாவம் உள்ள பெண்கள்; கொண்டாடும் விரும்பி அணைக்கத்தக்க; மல் அகலம் மிடுக்கையுடைய ராவணனின் மார்பை; அழல் ஏற அக்நி ஆக்ரமித்து உண்ணும்படியாகவும்; வெம் சமத்து பயங்கரமான போர்க்களத்திலே; கண்டாரை பார்த்தவராய் (வென்ற களைப்பு தீர); கடல் மல்லை கடல் மல்லை; உறைவாரை சயனித்திருப்பவனும்; கொண்டாடும் நெஞ்சு புகழ்ந்து பேசும்படியான மனம்; உடையார் அவர் படைத்த அடியார்கள்; எங்கள் குலதெய்வமே எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர்
viṇdārai enemies; venṛu destroyed (their); āvi body; vilangu animals such as dogs, jackals etc; uṇṇa to eat; mel iyalār tender natured women; koṇdu desirously; ādum to embrace; mal strong; agalam (rāvaṇa-s) chest; azhal fire; ĕṛa to catch (and consume); venjamaththu in the cruel battle; kaṇdārai one who saw (to eliminate that fatigue); kadal mallaith thala sayanaththu one who is mercifully reclining in sthalasayanam in thirukkadalmallai; koṇdādum nejudaiyār those who are having in their heart and cherish that; avar them; engal̤ kula dheyvam are the lords for our clan