PT 2.4.8

தன்னை நினைப்பவருக்கு அருள் செய்பவன் மலை

1085 பிச்சச்சிறுபீலிபிடித்துஉலகில்
பிணந்தின்மடவாரவர்போல் * அங்ஙனே
அச்சமிலர்நாணிலராதன்மையால்
அவர்செய்கைவெறுத்துஅணிமாமலர்தூய் *
நச்சிநமனார்அடையாமைநமக்கருள்செய்யென
உள்குழைந்து, ஆர்வமொடு *
நிச்சம்நினைவார்க்கருள்செய்யுமவற்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.
PT.2.4.8
1085 piccac ciṟu pīli piṭittu ulakil * piṇam tiṉ maṭavār-avar pol * aṅṅaṉe
accam ilar nāṇ ilar ātaṉmaiyāl * avar cĕykai vĕṟuttu aṇi mā malar tūy **
nacci namaṉār aṭaiyāmai * namakku arul̤cĕy ĕṉa ul̤ kuzhaintu ārvamŏṭu *
niccam niṉaivārkku arul̤cĕyyum- avaṟku iṭam * mā malai āvatu- nīrmalaiye-8

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1085. The Jains carry peacock feathers and like people who eat corpses they wander shamelessly and fearlessly. The devotees of the lord who hate the Jains come to our god's temple every day, sprinkle beautiful flowers with love on his feet and pray with their hearts melting, saying, “Protect us from Yama and give us your grace. ” He stays in the beautiful Thiruneermalai hills and gives his grace to his devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகில் இவ்வுலகத்தில்; பிச்சச் சிறுபீலி மயிலிறகு கையில்; பிடித்து வைத்திருக்கும் ஜைநர்கள்; பிணம் தின் பிணம் தின்கிற பிசாசு; மடவார் அவர் போல் ஸ்த்ரீகளைப்போலே; அங்ஙனே அச்சம் இலர் பயமில்லாதவர்களாயும்; நாண் இலர் வெட்கமில்லாதவர்களாயும்; ஆதன்மையால் இருப்பதாலே; அவர் செய்கை அவர்களுடைய நடத்தைகளை; வெறுத்து வெறுத்து; அணி மா அழகிய சிறந்த; மலர் தூய் மலர்களை ஸமர்ப்பித்து; நச்சி பெருமானை ஆசைப்பட்டு; நமனார் யமன் எங்களை; அடையாமை நமக்கு அடையாதபடி எமக்கு; அருள்செய் என உள் அருள்புரியவேணும் என்று; குழைந்து மனங்குழைந்து; ஆர்வமொடு அன்புடனே; நினைவார்க்கு நினைக்கும் அடியவர்களுக்கு; நிச்சம் நித்யம்; அருள் செய்யும் அருள் புரியும்; அவற்கு எம்பெருமானுக்கு; இடம் இருப்பிடமாவது; மா மலை ஆவது மா மலையான; நீர்மலையே நீர்மலையே
pichcham having feathers; siṛu small; peeli peacock feather bunch; pidiththu holding in the hand; ulagil in the world; piṇam dead bodies; thin eating; madavāravar pŏl like ghostly women; anganĕ similarly; achcham ilar being fearless; nāṇ ilar being shameless; ādhanmaiyāl due to this; avar seygai seeing the acts of those worldly people; veṛuththu having disgust; aṇi being beautiful; best; malar flowers; thūy submitting; nachchi desiring (for sarvĕṣvaran); namanār yama et al; adaiyāmai to be not reached; namakku arul̤ sey ena saying -you should mercifully grant-; ul̤ kuzhaindhu with a melted heart; ārvamodu with love; nichcham daily; ninaivārkku for those who meditate; arul̤ seyyumavarkku one who showers his mercy; idam āvadhu the abode; best; malai hill; nīr malai thirunīrmalai