PT 2.4.5

இராவணன் முடிபத்தும் அறுத்தவன் மலை

1082 மாலும்கடலாரமலைக்குவடிட்டு அணைகட்டி
வரம்புருவ * மதிசேர்
கோலமதிளாயஇலங்கைகெடப் படை
தொட்டுஒருகால்அமரிலதிர *
காலமிதுவென்றுஅயன்வாளியினால்
கதிர்நீண்முடிபத்தும்அறுத்தமரும் *
நீலமுகில்வண்ணனெ மக்கிறைவற்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே.
PT.2.4.5
1082 mālum kaṭal āra malaik kuvaṭu iṭṭu * aṇai kaṭṭi varampu uruva mati cer *
kola matil̤ āya ilaṅkai kĕṭap * paṭai tŏṭṭu ŏrukāl amaril atira **
kālam itu ĕṉṟu ayaṉ vāl̤iyiṉāl * katir nīl̤ muṭi pattum aṟuttu amarum *
nīla mukil vaṇṇaṉ ĕmakku iṟaivaṟku iṭam * mā malai āvatu-nīrmalaiye-5

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1082. The dark cloud-colored lord built a bridge on the roaring ocean to go to Lankā with beautiful forts over which moon floats and fought with the army of the Rākshasas, terrifying them, destroying Lankā, and cutting off the ten heads with shining crowns of Rāvana with the sword that was given to him by Nānmuhan. He stays in the wonderful Thiruneermalai hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு கால் முன்னொருகாலத்திலே; மாலும் அலைகளுள்ள; கடல் ஆர பெரிய கடல் நிறையும்படி; மலைக்குவடு மலையின் சிகரங்களை; இட்டு போட்டு; வரம்பு உருவ அக்கரையிலே சென்று சேரும்படி; அணைகட்டி அணைகட்டி; மதி சேர் சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற; கோல மதிள் ஆய அழகிய மதில்களையுடைய; இலங்கை கெட இலங்கை அழிய; படை தொட்டு ஆயதங்களைச் செலுத்தி; அமரில் அதிர போர்க்களத்தில் அதிரும்படி; காலம் ராவணனை அழிக்க; இது என்று இதுவே தக்க ஸமயமென்று; அயன் வாளியினால் ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே; கதிர் நீள் கிரீடங்களால் ஒளிபெற்ற நீண்ட; முடி பத்தும் பத்துத் தலைகளையும்; அறுத்து அறுத்து; அமரும் அயோத்தியிலிருக்கும்; நீல முகில் வண்ணன் காளமேக நிறத்தனான; எமக்கு இறைவற்கு எம்பெருமானுக்கு; இடம் இருப்பிடமாவது; மா மலை ஆவது மா மலையான; நீர்மலையே நீர்மலையே
orukāl when rāvaṇa crossed his limits; mālum having rising waves; kadal ocean; āra to become filled; malaik kuvadu ittu placing the peaks of mountain; varamburuva to reach the other shore; aṇai katti building the bridge; madhi sĕr being tall to reach up to the moon; kŏlam beautiful; madhil̤āya having forts; ilangai lankā; keda to be destroyed; padai weapons; thottu holding on (launching); amaril in the battle; adhira to cause tumult; idhu kālam enṛu determining that this is the right time to kill him; ayan vāl̤iyināl with brahmāsthram; kadhir radiant; nīl̤ mudi paththum the ten heads which are decorated with large crowns; aṛuththu severed; amarum one who became mercifully seated in ṣrī ayŏdhyā; neela mugil like a kāl̤a mĕgam (dark cloud); vaṇṇan one who has divine complexion; emakku iṛaivaṛku for our lord; idam āvadhu the abode; best; malai hill; nīr malai thirunīrmalai