PT 2.4.1

நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்

1078 அன்றாயர்குலக்கொடியோடு
அணிமாமலர்மங்கையொடுஅன்பளவி * அவுணர்க்கு
என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது * இரும்பொழில்சூழ்
நன்றாயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை
தடந்திகழ் கோவல்நகர் *
நின்றான்இருந்தான்கிடந்தான்நடந்தாற்குஇடம்
மாமலையாவதுநீர்மலையே. (2)
PT.2.4.1
1078 ## aṉṟu āyar kulak kŏṭiyoṭu * aṇi mā malar maṅkaiyŏṭu aṉpu al̤avi *
avuṇarkku ĕṉṟāṉum irakkam ilātavaṉukku * uṟaiyum iṭam āvatu **
irum pŏzhil cūzh naṉṟu āya puṉal naṟaiyūr tiruvāli kuṭantai * taṭam tikazh kovalnakar *
niṉṟāṉ iruntāṉ kiṭantāṉ naṭantāṟku iṭam * mā malai āvatu-nīrmalaiye-1

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1078. Our lord who stays with Lakshmi and the cowherd’s daughter Nappinnai, loving them, stands in Thirunaraiyur surrounded with flourishing water and thick groves, sits in Thiruvāli, reclines in Thirukkudantai and dances in Thirukkovalur flourishing with ponds. He does not show any compassion to the Rākshasas and stays in Thiruneermalai hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று கண்ணனாகப் பிறந்த அன்று; ஆயர் குல ஆயர்குலத்தில் பிறந்த; கொடியோடு கொடி போன்ற நப்பின்னையோடும்; அணி மா தாமரை மலரில் பிறந்த; மலர் மங்கையோடு மஹாலக்ஷ்மியோடும்; அன்பு அளவி அன்புடன் கலந்தவனும்; என்றானும் எக்காலத்திலும்; அவுணர்க்கு அசுரர்கள் விஷயத்திலே; இரக்கம் இலாதவனுக்கு இரக்கமில்லாத எம்பெருமான்; இரும் பொழில் பரந்த சோலைகளாலே; சூழ் சூழ்ந்த; நன்று ஆய புனல் நல்ல தீர்த்தங்களையுடைய; நறையூர் திருநறையூரிலே; நின்றான் நிற்பவனும்; திருவாலி திருவாலியிலே; இருந்தான் வீற்றிருப்பவனும்; குடந்தை திருக்குடந்தையிலே; கிடந்தான் சயனித்திருப்பவனும்; தடம் திகழ் தடாகங்கள் நிறைந்த; கோவல்நகர் திருக்கோவலூரிலே; நடந்தாற்கு உலகளந்த திருவிக்ரமனும்; உறையுமிடம் ஆவது இருக்குமிடம்; இடம் மா மலை ஆவது சிறந்த மலையான; நீர்மலையே திருநீர்மலையாம்
anṛu īn krishṇāvathāram; āyar kulakkodiyŏdu with nappinnaip pirātti who is like a creeper for cowherd clan; aṇi beautiful; best; malar mangaiyodu with rukmiṇip pirātti who is an incarnation of periya pirāttiyār (ṣrī mahālakshmi) who is having lotus flower as her birth place; anbu al̤avi manifesting love; en thānum at any time; avuṇarkku towards asuras; irakkam ilādhavanukku one who is not having mercy; iru vast; pozhil gardens; sūzh being surrounded; nanṛāya punal having abundance of water; naṛaiyūr in thirunaṛaiyūr; ninṛān standing; thiruvāli in thiruvāli; irundhān sitting; kudandhai in thirukkudandhai; kidandhān reclined; thadam by ponds; thigal̤ shining; kŏval nagar in thirukkŏvalūr; nadhandhāṛku for sarvĕṣvaran who walked; uṛaiyum eternally present; idam āvadhu abode; best; malai hill; nīr malai thirunīrmalai