PT 2.1.3

மனமே! வேங்கடவனை நினைக்கத் தொடங்கிவிட்டாயே !

1050 இண்டையாயினகொண்டு தொண்டர்களேத்துவாருறவோடும் * வானிடைக்
கொண்டுபோயிடவும் அதுகண்டுஎன்நெஞ்சமென்பாய்! *
வண்டுவாழ்வடவேங்கடமலை கோயில்கொண்டதனோடும் * மீமிசை
அண்டமாண்டிருப்பாற்கு அடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.3
1050 iṇṭai āyiṉa kŏṇṭu tŏṇṭarkal̤ * ettuvār uṟavoṭum * vāṉiṭaik
kŏṇṭu poy iṭavum * atu kaṇṭu ĕṉ nĕñcam ĕṉpāy **
vaṇṭu vāzh vaṭa veṅkaṭa malai * koyil kŏṇṭu ataṉoṭum * mīmicai
aṇṭam āṇṭu iruppāṟku * aṭimait tŏzhil pūṇṭāye-3

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1050. He accepts garlands and praises from His devotees, and graciously takes them, with all their kin, to the supreme sky of SriVaikuntam. Seeing such mercy, to the Lord who reigns over both this world and beyond, who has made the northern Vēṅkaṭa hills, buzzing with joyful bees, His temple, you, my heart, have now chosen to serve Him and embraced the path of eternal kainkaryam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சம் என்பாய் ஓ மனமே!; இண்டை ஆயின மலர் மாலைகளை; கொண்டு ஏந்திக் கொண்டு; ஏத்துவார் துதிக்கும்; தொண்டர்கள் தொண்டர்களை; உறவோடும் அவர்களுடைய உறவினர்களுடன்; கொண்டு போய் கொண்டுபோய்; வானிடை பரமபதத்திலே; இடவும் அது கண்டு சேர்க்கும் கருணையக் கண்டு; வண்டு வாழ் வண்டுகள் மகிழ்ந்து வாழும்; வட வேங்கட மலை திருமலையை; கோயில் கொண்டு கோயிலாகக் கொண்டு; அதனோடும் மீமிசை அண்டம் மேலும் பரமபதத்தை; ஆண்டு இருப்பாற்கு ஆளும் பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
en nenjam enbāy ŏh favourable mind!; iṇdaiyāyina known as flower garlands; koṇdu carrying; ĕththuvār those who are praising; thoṇdargal̤ servitors; uṛavŏdum along with their relatives; koṇdu pŏy carrying from here; vānidai in paramapadham; ida placed; adhu kaṇdu to see that simplicity; vaṇdu beetles; vāzh living gloriously; vada vĕngada malai thirumalā; kŏyil koṇdu having it as his abode; adhanŏdum with the leelā vibhūthi (samsāram) which includes that thirumalā; mīmisai aṇdam and nithya vibhūthi which is known as paramākāṣam (supreme sky); āṇdu iruppāṛku to the one who rules over; adimaith thozhil pūṇdāyĕ you are engaged in serving him!