PT 11.7.2

வாமனன் பெருமை கேளாச் செவிகள் செவிகளல்ல

2013 நீள்வான்குறளுருவாய் நின்றிரந்துமாவலிமண் *
தாளால்அளவிட்ட தக்கணைக்குமிக்கானை *
தோளாதமாமணியைத் தொண்டர்க்கினியானை *
கேளாச்செவிகள் செவியல்லகேட்டாமே.
2013 nīl̤vāṉ kuṟal̤ uru āy * niṉṟu irantu māvali maṇ *
tāl̤āl al̤aviṭṭa * takkaṇaikku mikkāṉai **
tol̤āta mā maṇiyait * tŏṇṭarkku iṉiyāṉai- *
kel̤āc cĕvikal̤ * cĕvi alla keṭṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2013. The highest lord who is sweet to his devotees shines as a precious jewel that never loses its luster. He, the highest and incomparable one, went as a dwarf to Mahābali, begged for three feet of land and measured the world and the sky with his feet. If the ears of devotees have not heard of him they are not truly ears.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள்வான் நீண்டு வளர்வதற்காக; குறள் உருவாய் வாமந உருவத்தோடு; நின்று யாகசாலையில் நின்று; மாவலி மகாபலியிடம்; மண் மூன்றடி மண்; இரந்து யாசித்து; தாளால் திருவடிகளால்; அளவிட்ட அளந்து கொண்டவனும்; தக்கணைக்கு தட்சிணையாக கொடுத்தது; மிக்கானை போதாதென்றவனும்; தோளாத துளையிடப்படாத சிறந்த; மா மணியை ரத்தினம் போன்றவனும்; தொண்டர்க்கு தொண்டர்களுக்கு; இனியானை இனிமையானவனுமான பெருமானை; கேளா அவன் பெருமைகளைக் கேளாத; செவிகள் காதுகள்; செவி அல்ல காதுகளே அல்ல; கேட்டாமே இதை நாம் கேட்டிருக்கிறோம்