PT 11.6.3

உலகுண்டவன் குணங்களைத் துதியுங்கள்

2004 நெற்றிமேல்கண்ணானும்நிறைமொழிவாய்நான்முகனும்
நீண்டநால்வாய் *
ஒற்றைக்கைவெண்பகட்டினொருவனையும்
உள்ளிட்டஅமரரோடும் *
வெற்றிப்போர்க்கடலரையன்விழுங்காமல்
தான்விழுங்கிஉய்யக்கொண்ட *
கொற்றப்போராழியான்குணம்பரவாச்சிறுதொண்டர்
கொடியவாறே!
2004 nĕṟṟimel kaṇṇāṉum * niṟai mŏzhi vāy
nāṉmukaṉum nīṇṭa nāl vāy *
ŏṟṟaik kai vĕṇ pakaṭṭiṉ * ŏruvaṉaiyum
ul̤l̤iṭṭa amararoṭum **
vĕṟṟip pork kaṭal araiyaṉ * vizhuṅkāmal
tāṉ vizhuṅki uyyakkŏṇṭa *
kŏṟṟappor āzhiyāṉ * kuṇam paravāc
ciṟutŏṇṭar kŏṭiya āṟe-3

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2004. He swallowed and kept in his stomach Shivā with an eye in his forehead, Nānmuhan, the god of the Vedās, Indra who rides the white elephant Airāvadam and all the other gods and he protected them there so that the victorious king of the ocean would not swallow them all. It is terrible that mean devotees do not praise the good nature of the lord with a victorious discus.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெற்றிமேல் நெற்றிக் கண்ணையுடைய; கண்ணானும் சிவனையும்; நிறை அர்த்தங்கள் நிறைந்த; மொழி வாய் வேதங்களை உச்சரிக்கும்; நான்முகனும் பிரமனையும்; நீண்ட நால் வாய் நீண்ட தொங்குகின்ற; ஒற்றைக் கை ஒரு துதிக்கையையுடைய; வெண் வெள்ளை; பகட்டின் யானை மேல் போகும்; ஒருவனையும் இந்திரனையும்; உள்ளிட்ட அமரரோடு மற்ற தேவதைகளையும்; வெற்றி போர் யுத்தத்தில் வெற்றி கொள்ளும்; கடல் அரையன் ஸமுத்திர ராஜன்; விழுங்காமல் விழுங்காமல் பிரளயத்தில்; தான் விழுங்கி தான் தன் வயிற்றில் வைத்து; உய்யக்கொண்ட காத்தருளின; கொற்றப் போர் யுத்தங்களில் வெற்றி பெரும்; ஆழியான் சக்கரத்தையுடைய எம்பெருமானின்; குணம் குணங்களை; பரவா வணங்கி துதிக்காத; சிறுதொண்டர் நீச மட்டமான தொண்டர்களின்; கொடிய ஆறே! கொடுமை தான் என்னே!