PT 11.6.2

பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவர் அவர்

2003 நில்லாதபெருவெள்ளம்
நெடுவிசும்பின்மீதோடிநிமிர்ந்தகாலம் *
மல்லாண்டதடக்கையால்
பகிரண்டமகப்படுத்தகாலத்து * அன்று
எல்லாரும்அறியாரோ?
எம்பெருமான்உண்டுமிழ்ந்தஎச்சில்தேவர் *
அல்லாதார்தாமுளரே?
அவனருளேஉலகாவதுஅறியீர்களே?
2003 nillāta pĕru vĕl̤l̤am * nĕṭu vicumpiṉ mītu
oṭi nimirnta kālam *
mal āṇṭa taṭak kaiyāl * pakiraṇṭam
akappaṭutta kālattu ** aṉṟu
ĕllārum aṟiyāro? * ĕm pĕrumāṉ
uṇṭu umizhnta ĕccil tevar *
allātār tām ul̤are? * avaṉ arul̤e
ulaku āvatu aṟiyīrkal̤e?-2

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2003. When the abundant flood came at the end of the eon and rose to the sky, the lord with his strong hands took all oceans with their water and swallowed them all. Everyone knows this. Is there anyone in the world or among the gods who was not swallowed and spit out by our god? O devotees, don’t you know that the world is here through his grace?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நில்லாத ஓரிடத்திலும் நிலை நில்லாத; பெரு வெள்ளம் பெரு வெள்ளமானது; நெடு விசும்பின் மீது ஆகாசத்துக்கு மேலேயும்; ஓடி வழிந்தோடி; நிமிர்ந்த காலம் பிரவகித்த காலத்தையும்; மல் ஆண்ட மிடுக்கையுடைய; தடக் கையால் பெரிய கையினாலே; பகிரண்டம் பரமபதத்தை; அகப்படுத்த பாதுகாத்து அருளின; காலத்து மகாப் பிரளய காலமாகிற; அன்று அக்காலத்தையும்; எல்லாரும் எல்லாரும்; அறியாரோ? அறிவார்களோ?; எம்பெருமான் எம்பெருமான்; உண்டு உமிழ்ந்த உண்டு உமிழ்ந்த; எச்சில் எச்சில்; அல்லாதார் அல்லாத; தேவர் தாம் தேவர்கள் தாம்; உளரே இருக்கிறார்களோ; உலகு உலகமானது; ஆவது சத்தைப் பெற்றிருப்பது; அவன் அருளே அவன் அருளாலே என்பதை; அறியீர்களே? அறியமாட்டீர்களோ?