PT 11.6.1

எம்பெருமான் செய்த நன்றியை மறவாதீர்

2002 மைந்நின்றகருங்கடல்வாயுலகின்றி
வானவரும்யாமுமெல்லாம் *
நெய்ந்நின்றசக்கரத்தன்திருவயிற்றில்
நெடுங்காலம்கிடந்ததுஓரீர் *
எந்நன்றிசெய்தாரா
ஏதிலோர்தெய்வத்தைஏத்துகின்றீர்? *
செய்ந்நன்றிகுன்றேன்மின்
தொண்டர்காள்! அண்டனையேஏத்தீர்களே. (2)
2002 ## main niṉṟa karuṅ kaṭalvāy ulaku iṉṟi *
vāṉavarum yāmum ĕllām *
nĕyn niṉṟa cakkarattaṉ tiruvayiṟṟil *
nĕṭuṅ kālam kiṭantatu orīr **
ĕn naṉṟi cĕytārā etilor *
tĕyvattai ettukiṉṟīr? *
cĕynnaṉṟi kuṉṟelmiṉ * tŏṇṭarkāl̤
aṇṭaṉaiye ettīrkal̤e-1

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2002. At the end of the eon, he swallowed all the gods’ worlds and the people of the seven worlds surrounded with dark oceans and he kept them in his divine stomach for a long time. Think about it, O devotees. You worship the gods of other religions who are our enemies. What good did they do for us? Don’t be ungrateful. Worship only our lord in the sky who carries a discus smeared with oil.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர்காள்! தொண்டர்களே!; மைந் நின்ற மை போன்ற; கருங் கடல் வாய் கருத்த கடலிடத்தில்; உலகு உலகம் பிரளய காலத்தில்; இன்றி ஒன்றும் இல்லாமல்; வானவரும் தேவர்களும்; யாமும் எல்லாம் நாமும் எல்லாப் பொருள்களும்; நெய்ந் நின்ற நெய்யிட்டு விளங்கும்; சக்கரத்தன் சக்கரத்தையுடைய எம்பெருமானின்; திருவயிற்றில் திருவயிற்றில்; நெடுங் காலம் பலகாலம் வைத்து காத்த; கிடந்தது ஓரீர் எம்பெருமானை அறியவில்லையே; ஏதிலோர் விரோதிகளின்; தெய்வத்தை தெய்வத்தை; எந் நன்றி என்ன உபகாரம்; செய்தாரா செய்தார்கள் என்று; ஏத்துகின்றீர் துதிக்கின்றீர்கள்; செய்ந் நன்றி எம்பெருமான் செய்தநன்றியை; குன்றேன்மின் மறக்காதீர்கள்; அண்டனையே அந்த பெருமானையே; ஏத்தீர்களே துதித்து வணங்குங்கள்