PT 11.2.5

என் வருத்தம் தீர்ப்பது கண்ணன் கையில்தான் உள்ளது

1966 அன்னைமுனிவதும் அன்றிலின்குரல்ஈர்வதும் *
மன்னுமறிகடலார்ப்பதும் வளைசோர்வதும் *
பொன்னங்கலையல்குல் அன்னமென்னடைப்பூங்குழல் *
பின்னைமணாளர் திறத்தமாயினபின்னையே.
1966 aṉṉai muṉivatum * aṉṟiliṉ kural īrvatum *
maṉṉu maṟi kaṭal ārppatum * val̤ai corvatum- **
pŏṉ am kalai alkul * aṉṉa mĕṉ naṭaip pūṅ kuzhal- *
piṉṉai maṇāl̤ar * tiṟattam āyiṉa piṉṉaiye

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1966. She says, “My mother scolds me. The calling of the andril bird makes me sick with love. The waves of the ocean roar and my bangles grow loose. These things have happened only since I fell in love with the beloved of Nappinnai whose waist is adorned with golden clothes and who walks softly like a swan with hair decorated with beautiful flowers. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னை பெற்ற தாய்; முனிவதும் கோபித்துக் கொள்வதும்; அன்றிலின் அன்றில்; குரல் பறவையின் குரல்; ஈர்வதும் இம்சிப்பதுவும்; மன்னு மறி அலைகளையுடைய; கடல் கடல்; ஆர்ப்பதும் கோஷிப்பதும்; வளை கைவளைகள்; சோர்வதும் கழல்வதும் இவை; பொன் அம்கலை பொன்னாடை அணிந்த; அல்குல் இடையையும்; அன்ன அன்ன; மென் நடை நடைஉடையவளும்; பூ பூவணிந்த; குழல் கூந்தலை உடையவளுமான; பின்னை நப்பின்னையின்; மணாளர் நாயகன்; திறத்தம் கண்ணனிடம்; ஆயின ஈடுபட்ட; பின்னையே பின்பே நேர்ந்தன