PT 11.2.3

தென்றல் என்னைத் துன்புறுத்துகிறதே!

1964 மல்லொடுகஞ்சனும் துஞ்சவென்றமணிவண்ணன் *
அல்லிமலர்த்தண்துழாய் நினைந்திருந்தேனையே *
எல்லியில்மாருதம் வந்தடும், அதுவன்றியும் *
கொல்லைவல்லேற்றின்மணியும் கோயின்மைசெய்யுமே.
1964 mallŏṭu kañcaṉum * tuñca vĕṉṟa maṇivaṇṇaṉ *
alli malart taṇ tuzhāy * niṉaintirunteṉaiye **
ĕlliyil mārutam * vantu aṭum atu aṉṟiyum *
kŏllai val eṟṟiṉ maṇiyum * koyiṉmai cĕyyume

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1964. She says, “The dark sapphire-colored lord fought the wrestlers sent by Kamsan and conquered Kamsan and killed him. I think always of his cool thulasi garlands strung with alli flowers. The breeze comes and torments me in the evening and the bells of the strong bulls returning from the fields give me pain. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லோடு மல்லர்களையும்; கஞ்சனும் கம்ஸனையும்; துஞ்ச கொன்று; வென்ற வெற்றி பெற்ற; மணி நீலமணி; வண்ணன் வண்ணனான கண்ணனின்; அல்லி மலர் இதழ்களையுடைய; தண் துழாய் குளிர்ந்த துளசிமாலையையே; நினைந்து நினைந்திருந்த; இருந்தேனையே என்னை; எல்லியில் அந்திப்போதில் வீசும்; மாருதம் காற்றானது; வந்து நானிருக்குமிடத்தில் வந்து; அடும் வீசி சுடுகிறது; அது அன்றியும் அதைத் தவிர; கொல்லை கொல்லைபுரத்திலிருந்து வரும்; வல் ஏற்றின் வலிய காளைகளின் கழுத்து; மணியும் மணியோசையும்; கோயின்மை என்னை; செய்யுமே துன்புறுத்துகிறது