PT 10.6.1

நர நாரணனா கட்டுண்டிருந்தவன்!

1898 எங்கானும்ஈதொப்பதோர்மாயமுண்டே?
நரநாரணனாய்உலகத்துஅறநூல் *
சிங்காமைவிரித்தவன்எம்பெருமான்
அதுவன்றியும்செஞ்சுடரும்நிலனும் *
பொங்கார்கடலும்பொருப்பும்நெருப்பும்நெருக்கிப்
புகப் பொன்மிடறுஅத்தனைபோது *
அங்காந்தவன்காண்மின்இன்றுஆய்ச் சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே. (2)
1898 ## ĕṅkāṉum ītu ŏppatu or māyam uṇṭe? *
-nara nāraṇaṉ āy ulakattu aṟanūl *
ciṅkāmai virittavaṉ ĕm pĕrumāṉ *
atu aṉṟiyum cĕñcuṭarum nilaṉum **
pŏṅku ār kaṭalum pŏruppum nĕruppum
nĕrukkip pukap * pŏṉ miṭaṟu attaṉaipotu *
aṅkāntavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-1

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1898. Is there a māyam like this? The lord Nārāyanan came to the earth as a man and taught the Vedās to the sages so that the Vedās would not disappear. With his golden throat he swallowed the hot sun, earth, rising oceans, mountains and fire and kept them in his stomach. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நர நரனாகவும்; நாரணனாய் நாரணனாகவும்; உலகத்து உலகத்தில்; அற நூல் தர்ம சாஸ்திரமான வேத நூல்; சிங்காமை சுருங்கிப் போகாதபடி; விரித்தவன் விவரித்த; எம் பெருமான் எம் பெருமான்; அது அன்றியும் அதுவும் அல்லாமல்; செஞ்சுடரும் சந்திர-ஸூர்யர்களும்; நிலனும் பூமியும்; பொங்கு ஆர் கடலும் அலைகடலும்; பொருப்பும் மலைகளும்; நெருப்பும் அக்னியும் ஆகிய இவை அனைத்தையும்; பொன் மிடறு பொன் போன்ற வயிற்றில்; நெருக்கி நெருக்கி; புக அத்தனைபோது உள்ளே புகு மளவும்; அங்காந்தவன் விரித்துக் கொண்டிருந்தவன்; காண்மின் காணீர்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!; ஈது ஒப்பது ஓர் மாயம் இதுபோன்ற ஆச்சரியம்; எங்கானும் உண்டே? எங்கேனும் கண்டதுண்டோ?