Chapter 5

Gopis ask Kannan to clap his hands - (பூங் கோதை)

சப்பாணி கொட்ட வேண்டுதல்
Gopis ask Kannan to clap his hands - (பூங் கோதை)
Clapping both hands together is called "Sappani," and this hand-clapping game is a child's play. In this manner, the āzhvār, assuming the role of Yashoda, calls Krishna to play and enjoy, asking Him to engage in this playful activity.
இரு கைகளையும் சேர்த்துத் தட்டுதல் சப்பாணி எனப்படும் இங்ஙனம் கை கொட்டி விளையாடுவது குழந்தையின் விளையாட்டு. இவ்வாறு விளையாடுமாறு யசோதை நிலையில் இருந்து கொண்டு இவ்வாழ்வார் கண்ணனை வேண்டுகிறார்.
Verses: 1888 to 1897
Grammar: Kaliththāḻisai / கலித்தாழிசை
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.5.1

1888 பூங்கோதையாய்ச்சி கடைவெண்ணெய்புக்குண்ண *
ஆங்கவள் ஆர்த்துப்புடைக்கப் புடையுண்டு *
ஏங்கியிருந்து சிணுங்கிவிளையாடும் *
ஓங்கோதவண்ணனே! சப்பாணி ஒளிமணிவண்ணனே! சப்பாணி. (2)
1888 ## பூங் கோதை ஆய்ச்சி * கடை வெண்ணெய் புக்கு உண்ண *
ஆங்கு அவள் ஆர்த்துப் * புடைக்கப் புடையுண்டு **
ஏங்கி இருந்து * சிணுங்கி விளையாடும் *
ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி * ஒளி மணி வண்ணனே சப்பாணி 1
1888 ## pūṅ kotai āycci * kaṭai vĕṇṇĕy pukku uṇṇa *
āṅku aval̤ ārttup * puṭaikkap puṭaiyuṇṭu **
eṅki iruntu * ciṇuṅki vil̤aiyāṭum *
oṅku ota vaṇṇaṉe cappāṇi * ŏl̤i maṇi vaṇṇaṉe cappāṇi-1

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1888. When you ate the butter that Yashodā the cowherdess with hair adorned with beautiful flowers churned and kept, she was upset, tied you up and hit you. You, colored like the ocean with roaring waves, cried and then played. Clap your hands, you who are colored like a bright sapphire, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூங் கோதை பூச்சூடிய கூந்தலையுடைய; ஆய்ச்சி யசோதையினால்; கடை கடையும் போதே; வெண்ணைய் வெண்ணையை; புக்கு உண்ண புகுந்து உண்டதால் அவள்; ஆங்கு அவள் அங்கேயே அவனை; ஆர்த்து புடைக்க கயிற்றால் கட்டி அடிக்க; புடையுண்டு அடிபட்டு; ஏங்கி இருந்து அழுது கொண்டிருந்த பின்; சிணுங்கி சீராட்டப்பெற்று; விளையாடும் விளையாடும்; ஓங்கு ஓத வண்ணனே! கடல் நிற வண்ணனே!; சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; ஒளி ஒளிபொருந்திய; மணி வண்ணனே! மணி போன்ற நிறமுடையவனே!; சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.2

1889 தாயர்மனங்கள்தடிப்பத் தயிர்நெய்யுண்
டேஎம்பிராக்கள் * இருநிலத்துஎங்கள்தம் *
ஆயரழக அடிகள் * அரவிந்த
வாயவனே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1889 தாயர் மனங்கள் தடிப்பத் * தயிர் நெய் உண்டு
ஏ எம் பிராக்கள் * இரு நிலத்து எங்கள் தம் **
ஆயர் அழக * அடிகள் * அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2
1889 tāyar maṉaṅkal̤ taṭippat * tayir nĕy uṇṭu
e ĕm pirākkal̤ * iru nilattu ĕṅkal̤-tam **
āyar azhaka * aṭikal̤ * aravinta
vāyavaṉe kŏṭṭāy cappāṇi * māl vaṇṇaṉe kŏṭṭāy cappāṇi 2

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1889. You, the most handsome cowherd in the whole world, stole the yogurt and butter and made the cowherd mothers upset. You are divine, with a mouth as beautiful as a lotus. Clap your hands, dark colored one, clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாயர் மனங்கள் தாய்மாருடைய மனம்; தடிப்ப ஆனந்தத்தால் துடிக்க; தயிர் நெய் உண்டு தயிர் நெய் உண்டு; ஏய் அப்படி செய்தது தகுந்தது தான் என்று நினைத்த; எம் பிராக்கள்! எம்பெருமானே! என்று; இரு நிலத்து விசாலமான இந்த பூமியிலே; எங்கள் தம் எங்கள்; ஆயர் அழக! இடைச்சாதிக்குள் அழகனே!; அரவிந்த தாமரைப் பூப்போன்ற; அடிகள் திருவடிகளும்; வாயவனே! திருமுகத்தையும் உடையவனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; மால் வண்ணனே! கருத்த நிறமுடையவனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.3

1890 தாம்மோருருட்டித் தயிர்நெய்விழுங்கிட்டு *
தாமோதவழ்வரென்று ஆய்ச்சியர்தாம்பினால் *
தாமோதரக்கையால் ஆர்க்கத்தழும்பிருந்த *
தாமோதரா! கொட்டாய்சப்பாணி தாமரைக்கண்ணனே! சப்பாணி.
1890 தாம் மோர் உருட்டித் * தயிர் நெய் விழுங்கிட்டு *
தாமோ தவழ்வர் என்று * ஆய்ச்சியர் தாம்பினால் **
தாம் மோதரக் கையால் * ஆர்க்கத் தழும்பு இருந்த *
தாமோதரா கொட்டாய் சப்பாணி * தாமரைக் கண்ணனே சப்பாணி 3
1890 tām mor uruṭṭit * tayir nĕy vizhuṅkiṭṭu *
tāmo tavazhvar ĕṉṟu * āycciyar tāmpiṉāl **
tām motarak kaiyāl * ārkkat tazhumpu irunta *
tāmotarā kŏṭṭāy cappāṇi * tāmaraik kaṇṇaṉe cappāṇi-3

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1890. When you rolled away the pots and swallowed the yogurt and the ghee, the cowherd women thought that you had eaten it but you crawled as if you knew nothing about it. They tied you up with a rope and hit you with their hands ornamented with rings. O Damodara with the mark on your waist! Clap your hands! Your eyes are beautiful like lotuses. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாம் மோர் தாவி மோர்ப்பானையை; உருட்டி உருட்டி விட்டு; தயிர் நெய் தயிர் நெய்; விழுங்கிட்டு விழுங்கி விட்டு; தாமோ ஒன்று மறியாத குழந்தை போல்; தவழ்வர் என்று தவழ்ந்து கொண்டிருந்தவனை; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; தாம்பினால் ஆர்க்க தாம்பால் கட்டவும்; தாம்மோதர கையால் கையால் அடிக்கவும்; தழும்பு இருந்த அதனால் தழும்பு ஏறி இருந்த; தாமோதரா! தாமோதரனே!; தாமரைக் கண்ணனே! தாமரைக் கண்ணனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.4

1891 பெற்றார்தளைகழலப் பேர்ந்தங்கயலிடத்து *
உற்றாரொருவரும்இன்றி உலகினில் *
மற்றாரும்அஞ்சப்போய் வஞ்சப்பெண்நஞ்சுண்ட *
கற்றாயனே! கொட்டாய்சப்பாணி கார்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1891 பெற்றார் தளை கழலப் * பேர்ந்து அங்கு அயல் இடத்து *
உற்றார் ஒருவரும் இன்றி * உலகினில் **
மற்றாரும் அஞ்சப் போய் * வஞ்சப் பெண் நஞ்சு உண்ட *
கற்றாயனே கொட்டாய் சப்பாணி * கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி 4
1891 pĕṟṟār tal̤ai kazhalap * perntu aṅku ayal iṭattu *
uṟṟār ŏruvarum iṉṟi * ulakiṉil **
maṟṟārum añcap poy * vañcap pĕṇ nañcu uṇṭa *
kaṟṟāyaṉe kŏṭṭāy cappāṇi * kār vaṇṇaṉe kŏṭṭāy cappāṇi-4

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1891. Born in a prison, you removed the chains on your parents’ feet and released them, and your father Vasudeva took you to the cowherd village in the night and you were raised there. Everyone was afraid of going near the cheating devil Putanā when she came to you but without anyone to help you, you approached her and drank her poisonous milk. O cowherd! You graze the calves. Clap your hands! You with the dark color of a cloud, clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்றார் தாய் தந்தையருடைய; தளை கால்விலங்கு; கழலப் கழன்று விழும்படி; பேர்ந்து வந்து அவதரித்து; அங்கு அவ்விடத்தில்; அயல் இடத்து நெருங்கின; உற்றார் உறவுமுறையார்; ஒருவரும் இன்றி ஒருவருமில்லாமலிருக்க; உலகினில் மற்றாரும் உலகினில் அனைவரும்; அஞ்சப் போய் அஞ்சும்படி; வஞ்சப் பெண் வஞ்சனையுடன் வந்த பூதனயின்; நஞ்சு உண்ட விஷத்தை உண்டவனே!; கற்றாயனே! கன்றுகளை மேய்த்த கண்ணனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; கார் காளமேகம் போன்ற; வண்ணனே! நிறமுடையவனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.5

1892 சோத்தெனநின்னைத் தொழுவன்வரந்தர *
பேய்ச்சிமுலையுண்டபிள்ளாய்! * பெரியன
ஆய்ச்சியர் அப்பம்தருவர் * அவர்க்காகச்
சாற்றியோராயிரம்சப்பாணி தடங்கைகளால்கொட்டாய் சப்பாணி.
1892 சோத்து என நின்னைத் * தொழுவன் வரம் தர *
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் ** பெரியன
ஆய்ச்சியர் * அப்பம் தருவர் * அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி * தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி 5
1892 cottu ĕṉa niṉṉait * tŏzhuvaṉ varam tara *
peycci mulai uṇṭa pil̤l̤āy ** pĕriyaṉa
āycciyar * appam taruvar * avarkkākac
cāṟṟi or āyiram cappāṇi * taṭaṅ kaikal̤āl kŏṭṭāy cappāṇi-5

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1892. I worship you, the god, and ask for boons. When you were a baby you drank the milk of the devil Putanā. The cowherd women give you big appams. Clap your hands thousand times for them. Clap a thousand times with your beautiful hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய்ச்சி முலை பூதனையின் விஷப் பாலை; உண்ட பிள்ளாய்! உண்ட கண்ணனே!; வரம் தர எனக்கு வரம் தர வேண்டும்; நின்னை உன்னை; சோத்து என சோத்தம் அஞ்ஜலி என்று; தொழுவன் வணங்குகிறேன்; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; பெரியன அப்பம் பெரிய அப்பம்; தருவர் தருவர்; அவர்க்காக சாற்றி ஓர் அவர்களுக்காக என்று; தடங் கைகளால் உன் அகன்ற கைகளால்; ஆயிரம் சப்பாணி ஆயிரம் சப்பாணி; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.6

1893 கேவலமன்று உன்வயிறு * வயிற்றுக்கு
நானவலவப்பம்தருவன் * கருவிளைப்
பூவலர்நீள்முடி நந்தன்தன்போரேறே! *
கோவலனே! கொட்டாய்சப்பாணி குடமாடீ! கொட்டாய்சப்பாணி.
1893 கேவலம் அன்று * உன் வயிறு வயிற்றுக்கு *
நான் அவல் அப்பம் தருவன் ** கருவிளைப்
பூ அலர் நீள் முடி * நந்தன் தன் போர் ஏறே *
கோவலனே கொட்டாய் சப்பாணி * குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி 6
1893 kevalam aṉṟu * uṉ vayiṟu vayiṟṟukku *
nāṉ aval appam taruvaṉ ** karuvil̤aip
pū alar nīl̤ muṭi * nantaṉ-taṉ por eṟe *
kovalaṉe kŏṭṭāy cappāṇi * kuṭam āṭī kŏṭṭāy cappāṇi-6

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1893. It is not hard to feed you. I will give you enough snacks, aval and appams to fill your stomach. You who wear a dark karuvilai flower in your long hair are a fighting bull, Kovalan the son of Nandagopan. Clap your hands! You danced on a pot. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருவிளை பூ காக்கணாம் பூவின் நிறமுடையவனே!; அலர் மலர் சூடின; நீள் முடி நீண்ட முடியுடையவனே!; நந்தன் தன் நந்தகோபன் வளர்த்த; போர் ஏறே போர் காளையே!; கோவலனே! கோபாலனே!; உன் வயிறு உன் வயிறு; கேவலம் அன்று சாதாரணமானது இல்லை; வயிற்றுக்கு நான் வயிற்றுக்கு நான் நிறைய; அவல் அப்பம் அவல் அப்பம்; தருவன் தருவேன்; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; குடம் ஆடீ! குடக் கூத்தாடினவனே! கண்ணனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.7

1894 புள்ளினைவாய்பிளந்து பூங்குருந்தம்சாய்த்து *
துள்ளிவிளயாடித் தூங்குறிவெண்ணெயை *
அள்ளியகையால் அடியேன்முலைநெருடும் *
பிள்ளைப்பிரான்! கொட்டாய்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
1894 புள்ளினை வாய் பிளந்து * பூங் குருந்தம் சாய்த்து *
துள்ளி விளையாடி * தூங்கு உறி வெண்ணெயை **
அள்ளிய கையால் * அடியேன் முலை நெருடும் *
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி * பேய் முலை உண்டானே சப்பாணி 7
1894 pul̤l̤iṉai vāy pil̤antu * pūṅ kuruntam cāyttu *
tul̤l̤i vil̤aiyāṭi * tūṅku uṟi vĕṇṇĕyai **
al̤l̤iya kaiyāl * aṭiyeṉ mulai nĕruṭum *
pil̤l̤aip pirāṉ kŏṭṭāy cappāṇi * pey mulai uṇṭāṉe cappāṇi-7

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1894. When Bakāsuran came as a bird you split open his beak, and you knocked down the blooming kurundam tree. You jumped around and played and stole butter from the pot tied on the uri. You are the child who drank milk from my breasts. Clap your hands! You drank milk from the breast of the devil Putanā. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளினை வாய் பகாசுர பறவையின் வாயை; பிளந்து பிளந்தவனே!; பூங் குருந்தம் பூத்திருந்த குருந்த மரத்தை; சாய்த்து சாய்த்து முறித்து; துள்ளி விளையாடி துள்ளி விளையாடினவனே!; தூங்கு உறி தொங்கும் உறியிலுள்ள; வெண்ணெயை வெண்ணெயை; அள்ளிய கையால் கையால் அள்ளி உண்டபின்; அடியேன் என்; முலை நெருடும் மார்பகங்களை நெருடும்; பிள்ளைப் பிரான்! குறும்புக்கார பெருமானே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; பேய் முலை பூதனையின்; உண்டானே! விஷப்பாலை உண்டவனே!; சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.8

1895 யாயும்பிறரும் அறியாதயாமத்து *
மாயவலவைப்பெண் வந்துமுலைதர *
பேயென்றுஅவளைப் பிடித்துஉயிரையுண்ட *
வாயவனே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1895 யாயும் பிறரும் * அறியாத யாமத்து *
மாய வலவைப் * பெண் வந்து முலை தர **
பேய் என்று அவளைப் * பிடித்து உயிர் உண்ட *
வாயவனே கொட்டாய் சப்பாணி * மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி 8
1895 yāyum piṟarum * aṟiyāta yāmattu *
māya valavaip * pĕṇ vantu mulai tara **
pey ĕṉṟu aval̤aip * piṭittu uyir uṇṭa *
vāyavaṉe kŏṭṭāy cappāṇi * mālvaṇṇaṉe kŏṭṭāy cappāṇi-8

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1895. The devious devil Putanā came in the middle of the night when your mother and others were sleeping and gave her milk to you from her breasts. You drank her poisonous milk and killed her. Clap your hands! You have a dark color. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாயும் பெற்ற தாயாகிய நானும்; பிறரும் மற்றவர்களும்; அறியாத அறியாத; யாமத்து நள்ளிரவில்; மாய வலவைப் பெண் மாயப் பெண்ணாக வந்த; வந்து முலை தர பூதனை பால் கொடுக்க; பேய் என்று பேய் என்று அறிந்து; அவளைப் பிடித்து அவளைப் பிடித்து; உயிர் உண்ட அவள் உயிர் உண்ட; வாயவனே! வாயை உடையவனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; மால் வண்ணனே! கருத்த நிறமுடைய திருமாலே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.9

1896 கள்ளக்குழவியாய்க் காலால்சகடத்தை *
தள்ளியுதைத்திட்டுத் தாயாய்வருவாளை *
மெள்ளத்தொடர்ந்து பிடித்துஆருயிருண்ட *
வள்ளலே! கொட்டாய்சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்சப்பாணி.
1896 கள்ளக் குழவி ஆய்க் * காலால் சகடத்தை *
தள்ளி உதைத்திட்டுத் * தாய் ஆய் வருவாளை **
மெள்ளத் தொடர்ந்து * பிடித்து ஆர் உயிர் உண்ட *
வள்ளலே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 9
1896 kal̤l̤ak kuzhavi āyk * kālāl cakaṭattai *
tal̤l̤i utaittiṭṭut * tāy āy varuvāl̤ai **
mĕl̤l̤at tŏṭarntu * piṭittu ār uyir uṇṭa *
val̤l̤ale kŏṭṭāy cappāṇi * māl vaṇṇaṉe kŏṭṭāy cappāṇi-9

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1896. You were a naughty child and stole butter. You kicked Sakatāsuran when he came as a cart and when devil Putanā came as a mother, you drank her poisonous milk and killed her. You are generous! Clap your hands! You have a dark color. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ளக் குழவி ஆய் மாயக் குழந்தையாய் பிறந்து; காலால் சகடத்தை சகடாஸுரனை காலால்; தள்ளி உதைத்திட்டு தள்ளி உதைத்தவனும்; தாய் ஆய் தாய் வேடமிட்டு; வருவாளை வந்தவளை; மெள்ளத் தொடர்ந்து மெள்ளத் தொடர்ந்து; பிடித்து பிடித்து; ஆர் உயிர் அவள் உயிரை; உண்ட உண்டவனுமான; வள்ளலே! வள்ளலே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; மால் வண்ணனே! கருத்த நிறமுடைய திருமாலே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்

PT 10.5.10

1897 காரார்புயல்கைக்கலிகன்றி மங்கையர்கோன் *
பேராளன்நெஞ்சில் பிரியாதுஇடங்கொண்ட
சீராளா! * செந்தாமரைக்கண்ணா! தண்துழாய்த்
தாராளா! * கொட்டாய்சப்பாணி தடமார்வா! கொட்டாய்சப்பாணி. (2)
1897 ## கார் ஆர் புயல் கைக் * கலிகன்றி மங்கையர் கோன் *
பேராளன் நெஞ்சில் * பிரியாது இடம்கொண்ட
சீராளா ** செந்தாமரைக் கண்ணா * தண் துழாய்த் *
தார் ஆளா கொட்டாய் சப்பாணி * தட மார்வா கொட்டாய் சப்பாணி 10
1897 ## kār ār puyal kaik * kalikaṉṟi maṅkaiyar-koṉ *
perāl̤aṉ nĕñcil * piriyātu iṭamkŏṇṭa
cīrāl̤ā ** cĕntāmaraik kaṇṇā * taṇ tuzhāyt *
tār āl̤ā kŏṭṭāy cappāṇi * taṭa mārvā kŏṭṭāy cappāṇi-10

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1897. Kaliyan, the chief of Thirumangai, is generous as a rain-giving cloud. O dear lord, you stay in the poet’s mind always. Your eyes are as beautiful as lotuses and you are adorned with cool thulasi garlands. Clap your hands! You have a broad chest. Clap your hands!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் கார்காலத்து மேகம்; புயல் அள்ளிக் கொடுக்கும் மேகம் போன்ற; கை கையை உடையவனே!; பேராளன் பெருமை பொருந்திய; மங்கையர் கோன் திருமங்கை மன்னன்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; நெஞ்சில் மனதில்; பிரியாது இடம் கொண்ட பிரியாது இடம் கொண்ட; சீராளா! செல்வமுடையவனே!; செந்தாமரைக்கண்ணா! செந்தாமரைக்கண்ணனே!; தண் துழாய்த் குளிர்ந்த துளசி மாலை; தார் ஆளா! அணிந்தவனே!; கொட்டாய் சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்; தட மார்வா! விசாலமான மார்பை உடையவனே!; சப்பாணி நீ கைக் கொட்டி அருள வேண்டும்