PT 1.9.6

துன்பத்தினால் உடல் தளர்ந்தவன்; என்னை ஆட்கொள்

1033 மன்னாய்நீர்எரிகால் மஞ்சுலாவும்ஆகாசமுமாம் *
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன் *
விண்ணார்நீள்சிகர விரையார்திருவேங்கடவா! *
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
PT.1.9.6
1033 maṇ āy nīr ĕri kāl * mañcu ulāvum ākācamum ām *
puṇ ār ākkai-taṉṉul̤ * pulampit tal̤arntu ĕyttŏzhinteṉ **
viṇ ār nīl̤ cikara * viraiār tiruveṅkaṭavā! *
aṇṇā vantu aṭainteṉ * aṭiyeṉai āṭ kŏṇṭarul̤e-6

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1033. O Lord of fragrant Thiruvēṅkaṭam, the sacred hills that rise high and pierce the sky with its towering peaks. I am caught in this body made of earth, water, fire, wind, and the wide sky that contains moving clouds. Afflicted by pain and weakened by longing, I have come and surrendered at Your feet. O merciful Master, take me in—this servant who has no refuge but You.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண் ஆர் ஆகாசத்தளவு; நீள் உயர்ந்திருக்கும்; சிகர கொடுமுடிகளையுடைய; விரையார் மணம் மிக்க; திருவேங்கடவா! திருமலையிலிருப்பவனே!; மண் ஆய் நீர் எரி பூமி ஜலம் அக்நி; கால் வாயு ஆகியவைகளாய்; மஞ்சு உலாவும் மேகங்கள் உலாவும்; ஆகாசமும் ஆம் ஆகாசமும் ஆக ஐந்து பூதத்தினாலான; புண் ஆர் வியாதிகள் நிறைந்த; ஆக்கை தன்னுள் சரீரத்தில்; புலம்பி அகப்பட்டு; தளர்ந்து கதறியழுது உடல்; எய்த்தொழிந்தேன் மிகவும் மெலிந்து ஒழிந்தேன்; அண்ணா! ஸ்வாமியே!; வந்து அடைந்தேன் உன்னை வந்து அடைந்தேன்; அடியேனை தாஸனான என்னை; ஆட்கொண்டருளே ஆட்கொண்டருளவேணும்
viṇ sky; ār to touch; nīl̤ tall; sigaram peaks; virai fragrance; ār having; thiruvĕngadavā ŏh one who has thirumalā as your abode!; aṇṇā ŏh one has all types of relationships!; maṇṇāy being earth; nīrāy being water; eriyāy being fire; kālāy being air; manju clouds; ulāvum roaming; ākāsamumām being sky, hence, being made of the five great elements; puṇ ār resembling a wound; ākkai thannul̤ (being held captive) in the body; pulambi calling out; thal̤arndhu becoming weakened; eyththu ozhindhĕn ī who have become very tired; vandhu adaindhĕn ī came and surrendered;; adiyĕnai āt koṇdu arul̤ kindly accept my service.