PT 1.8.9

திருமந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இரு

1026 பேசுமின்திருநாமம்எட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் *
பேசுவார்த்தம்மைஉய்யவாங்கிப் பிறப்பறுக்கும்பிரானிடம் *
வாசமாமலர்நாறுவார்பொழில் சூழ்தரும்உலகுக்கெல்லாம் *
தேசமாய்த்திகழும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
PT.1.8.9
1026 ## pecum iṉ tirunāmam ĕṭṭu ĕzhuttum * cŏlli niṉṟu piṉṉarum *
pecuvār-tamai uyya vāṅkip * piṟappu aṟukkum pirāṉ iṭam **
vāca mā malar nāṟu vār pŏzhil * cūzh tarum ulakukku ĕllām *
tecamāyt tikazhum malait * tiruveṅkaṭam aṭai nĕñcame-9

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1026. He, whose sweet and sacred name of eight syllables, is worthy of endless praise, uplifts those who recite it once and again with steady devotion. He breaks the bonds of birth, granting liberation to those who seek Him. That Lord, the great benefactor, dwells where fragrant blossoms bloom, and vast gardens spread their scent. That hill, Thiruvēṅkaṭam, shines as the crown of all the worlds. O mind! Go, and reach that Thiruvēṅkaṭam!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேசும் துதிக்கத் தகுந்த; இன் திருநாமம் இனிய திருநாமமான; எட்டு எழுத்தும் எட்டு எழுத்து மந்திரத்தை; சொல்லி நின்று பின்னரும் அநுஸந்தித்து மேலும்; பேசுவார் தமை அநுஸந்திப்பவர்களை; உய்ய வாங்கி வாழ வைத்து; பிறப்பு ஸம்ஸார; அறுக்கும் பந்தத்தை அறுக்கும்; பிரான் இடம் எம்பெருமான் இருக்குமிடம்; வாச மணம் மிக்க; மா மலர் சிறந்த புஷ்பங்கள்; நாறு வார் கமழும் விசாலமான; பொழில் சோலைகளாலே; சூழ் தரும் சூழப்பட்டதும்; உலகுக்கு எல்லாம் உலகங்களுக்கு எல்லாம்; தேசமாய் திலகம்போன்று; திகழும் விளங்குவதுமான; மலை திருவேங்கடம் திருவேங்கடம் மலையை; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
pĕsum recited (by all); in sweet (for the tongue); thirunāmam divine name; ettu ezhuththum the eight divine syllables; solli ninṛu reciting once; pinnarum further; pĕsuvār thammai those who keep reciting; uyya to be uplifted; vāngi accepted; piṛappu (their) connection in this samsāram; aṛukkum one who mercifully eliminates; pirān the act of the great benefactor; idam abode is; vāsam fragrant; best; malar flowers; nāṛu spreading the fragrance; vār vast; pozhil by gardens; sūzh tharum being surrounded; ulagukku ellām for all worlds; thĕsamāy giving radiance; thigazhum shining; malai hill; thiruvĕngadam thirumalā; adai nenjamĕ ŏh mind! ṛeach there.