PT 1.6.7

நெஞ்சை விட்டுப் பிரியாதவன்

1004 நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும்
நீதியல்லாதனசெய்தும் *
துஞ்சினார்செல்லுந்தொன்நெறிகேட்டே
துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்! *
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்பிரியா
வானவா! தானவர்க்கு என்றும்
நஞ்சனே! * வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.7
1004 nĕñciṉāl niṉaintum vāyiṉāl mŏzhintum * nīti allātaṉa cĕytum *
tuñciṉār cĕllum tŏl nĕṟi keṭṭe * tul̤aṅkiṉeṉ vil̤aṅkaṉi muṉintāy **
vañcaṉeṉ aṭiyeṉ nĕñciṉil piriyā * vāṉavā tāṉavarkku ĕṉṟum
nañcaṉe * vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-7

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Reference Scriptures

BG. . 8-26

Simple Translation

1004. O my Father in Naimiśāraṇyam, who struck down the asura disguised as a fruit! You are poison to the wicked, yet You entered even the heart of a deceitful one like me and never left. O Lord of the Nityasūris! I thought, spoke, and acted against all that is just and right. When I heard of the ancient path where such souls are dragged on the road of death and torment, my heart trembled. And so, I have come now, falling at Your divine feet for refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; விளங்கனி விளாம்பழமாய் வந்த அஸுரனை; முனிந்தாய்! முடித்தாய்; தானவர்க்கு என்றும் அசுரர்களுக்கு எப்போதும்; நஞ்சனே! விஷம் போன்றவனே!; வஞ்சனேன் அடியேன் வஞ்சகனான; நெஞ்சினில் என் மனதிலும்; பிரியா வானவா! வந்து புகுந்தவனே! தேவனே!; நீதி அல்லாதன நீதி அல்லாதவற்றை; நெஞ்சினால் நினைந்தும் நெஞ்சினால் நினைந்தும்; வாயினால் மொழிந்தும் வாயாலே சொல்லியும்; செய்தும் செய்கையினால் செய்தும்; துஞ்சினார் செல்லும் இறந்தவர்கள் அடையும்; தொல் நெறி நரகமார்க்கத்தை பற்றி; கேட்டே கேட்டமாத்திரத்திலே; துளங்கினேன் நடுங்கினவனாய் வந்து; உன் திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
vil̤angani demon kapiththāsura who came in the form of a wood apple; munindhāy oh one who showed your anger and destroyed!; vanjanĕn adiyĕn ī, who am deceitful, my; nenjinil (entering) in heart; piriyā not leaving; vānavā ŏh controller of nithyasūris!; enṛum always; thānavarkku for demons; nanjanĕ ŏh death!; naimisāraṇiyaththul̤ endhāy ŏh my lord who is residing in ṣrī naimiṣāraṇyam!; nīdhi allādhana What is forbidden by ṣāsthrams; nenjināl by mind; ninaindhum thought; vāyināl by mouth; mozhindhum spoke; seyhdhum practiced; thunjninār those who perished; sellum to go; thol ancient; neṛi path to hell; kĕttĕ immediately on hearing; thul̤anginĕn having shivers; un thiruvadi vandhu adaindhĕn surrendered unto your divine feet.