PT 1.6.4

இயமதூதர் தண்டிப்பரே! காப்பாற்று

1001 வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து
பிறர்பொருள்தாரமென்றிவற்றை *
நம்பினாரிறந்தால்நமன்தமர்பற்றி
எற்றிவைத்து, எரியெழுகின்ற *
செம்பினாலியன்றபாவையைப்
பாவீ * தழுவெனமொழிவதற்க்கு அஞ்சி *
நம்பனே! வந்து உன் திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.4
1001 vampu ulām kūntal maṉaiviyait tuṟantu * piṟar pŏrul̤ tāram ĕṉṟu ivaṟṟai *
nampiṉār iṟantāl namaṉ-tamar paṟṟi * ĕṟṟi vaittu ** ĕri ĕzhukiṉṟa
cĕmpiṉāl iyaṉṟa pāvaiyaip * pāvī tazhuvu ĕṉa mŏzhivataṟku añci *
nampaṉe vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-4

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1001. O my Father in Naimiśāraṇyam, O Trustworthy One! I abandoned my own wife, desired the wives of others, and called them my own. When such sinners die, Yama’s messengers seize them, torture them, and place them before a woman made of burning copper, saying, “Embrace her now, sinner!” Fearing this fate, I have come, and now cling to Your holy feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; வம்பு உலாம் மணம் மிக்க; கூந்தல் கூந்தலையுடைய; மனைவியைத் துறந்து மனைவியைத் துறந்து; பிறர் பொருள் பிறருடைய மனைவியை; தாரம் தன் மனைவி; என்று இவற்றை என்று இவற்றை; நம்பினார் விரும்பினவர்கள்; இறந்தால் இறந்துபோனால்; நமன் தமர் யமதூதர்கள்; பற்றி பிடித்துக்கொண்டு; எற்றி துன்பப்படுத்தி; வைத்து ஓரிடத்தில் போட்டுவைத்து; பாவீ! பெரும்பாவம் செய்து இங்கு வந்து சேர்ந்தவனே!; செம்பினால் இயன்ற செம்பினால் செய்யப்பட்டதாய்; எரி எழுகின்ற நெருப்புப் பற்றியெரிகிற; பாவையை பெண் உருவை; தழுவு என தழுவிக்கொள் என்று; மொழிவதற்கு சொல்லப்போகிறார்களே; அஞ்சி என்று பயப்பட்டு; நம்பனே! வந்து நம்பத்தகுந்த உன்னை நம்பி; உன் திருவடி இங்கு வந்து உன் திருவடிகளை; அடைந்தேன் அடைந்தேன்
naimisāraṇiyaththul̤ endhāy ŏh my lord who is residing in ṣrī naimiṣāraṇyam!; nambanĕ ŏh trustworthy one!; vambu ulām fragrant; kūndhal having hair; manaiviyai (one-s) wife; thuṛandhu abandoned; piṛar porul̤ others- wealth; piṛar dhāram others- wives; enṛu ivaṝai these; nambinār those who desired; iṛandhāl when they die; naman thamar servitors of yama; paṝi catch them; eṝi torture them; vaiththu keeping them in a place; sembināl with copper; iyanṛa made; eri ezhuginṛa very hot with fiery sparks; pāvaiyai a woman-s statue (placing in front); pāvī! ŏh sinner!; thazhuvu embrace (this); ena mozhivadhaṛku for the words [which they will] speak; anji fearing that; un thiruvadi vandhu adaindhĕn came and surrendered at your divine feet.