PT 1.5.9

அனைவரும் அருள் வேண்டுமிடம் சாளக்கிராமம்

996 தொண்டாமினமும்இமையோரும் துணைநூல் மார்பினந்தணரும் *
அண்டா! எமக்கேயருளாயென்று அணையும்கோயிலருகெல்லாம் *
வண்டார்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய *
தண்தாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.9
996 tŏṇṭu ām iṉamum imaiyorum * tuṇai nūl mārpiṉ antaṇarum *
aṇṭā ĕmakke arul̤āy ĕṉṟu * aṇaiyum koyil aruku ĕllām **
vaṇṭu ār pŏzhiliṉ pazhaṉattu * vayaliṉ ayale kayal pāya *
taṇ tāmaraikal̤ mukam alarttum * cāl̤akkirāmam aṭai nĕñce-9 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

996. O heart, let us go to the temple in SālakkiRāmam surrounded with flourishing fields where fish frolic, groves swarm with bees and cool lotuses bloom. Groups of devotees, gods in the sky and Andanars skilled in the Vedās, wearing sacred threads on their chests, go there and worship and praise him saying, “O god of gods! Give us your grace!” Let us go there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டு ஆம் தொண்டு செய்யும்; இனமும் அடியார்கள் கூட்டமும்; இமையோரும் நித்யஸூரிகளும்; துணை நூல் மார்பின் பூணூல் தரித்த; அந்தணரும் பிராம்மணர்களும்; அண்டா! எமக்கே தேவனே எங்களுக்கே; அருளாய் என்று அருள் புரிய வேணும்’ என்று; அணையும் கோயில் கோயில் அருகிலிருக்கும்; அருகு எல்லாம் சுற்றுப்பிரதேசங்களெங்கும்; வண்டார் வண்டுகள் நிறைந்த; பொழிலின் சோலைகளில்; பழனத்து வயலின் அயலே உண்டான நீர்நிலங்களில்; கயல் பாய கயல் மீன்கள் வந்து துள்ள; தண் தாமரைகள் குளிர்ந்த தாமரை மொட்டுக்கள்; முகம் அலர்த்தும் முகம் மலர்ந்து பூத்ததுமான; சாளக்கிராமம் சாளக்கிராமத்திலிருப்பவனை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
thoṇdām inamum group of ṣrīvaishṇavas who are totally serving emperumān; imaiyŏrum nithyasūris (eternal associates of bhagavān in paramapadham); thuṇai nūl wearing two yagyŏpavīthams; mārvin having chest; andhaṇarum brāhmaṇas; aṇdā ŏh controller of all oval shaped universes!; emakku in our matters; arul̤āy show your mercy; enṛu saying so; aṇaiyum approaching; kŏyil temple-s; arugu ellām nearby places; vaṇdu beetles; ār being filled with; pozhilin present in the garden; pazhanaththu ayal in the surroundings of the water-bodies; vayalin from the fertile fields; kayal fishes; pāya as they jump (into the water-bodies); thaṇ cool; thāmaraigal̤ lotus buds; mugam alarththum becoming blossomed and shining due to that; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṛeach such ṣrī sāl̤agrāmam.