PT 1.5.6

உலகளந்தான் வாழுமிடம் சாளக்கிராமம்

993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்இழுதும்உடனுண்ட
வாயான் * தூயஅரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலியை
ஏயானிரப்ப * மூவடிமண்இன்றேதாவென்று உலகேழும்
தாயான் * காயாமலர்வண்ணன் சாளக்கிராமம் அடைநெஞ்சே!
PT.1.5.6
993 tāy āy vanta pey uyirum * tayirum vizhutum uṭaṉ uṇṭa
vāyāṉ * tūya vari uruviṉ kuṟal̤āyc cĕṉṟu * māvaliyai
eyāṉ irappa ** mūvaṭi maṇ iṉṟe tā ĕṉṟu * ulaku ezhum
tāyāṉ * kāyā malar vaṇṇaṉ * cāl̤akkirāmam aṭai nĕñce-6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

993. The lord dark as a kāyām flower drank the poisonous milk of Putanā when she came as a mother and killed her, stole yogurt and butter and swallowed them in the cowherd village, and went as a pure handsome dwarf to king Mahabali’s sacrifice, asked him, “Give me three feet of land now, ” received the land, grew tall and measured the seven worlds and the sky with his marvelous feet. He stays in SālakkiRāmam. O heart, let us go and worship that lord of there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் ஆய் வந்த தாய் வடிவுடன் வந்த; பேய் உயிரும் பூதனையின் உயிரையும்; தயிரும் விழுதும் தயிரையும் வெண்ணெயையும்; உடன் உண்ட ஒன்றுசேர்த்து உண்ட; வாயான் வாயையுடையவனும்; ஏயான் யாசிக்கத் தகாத; தூய வரி தூய அழகிய; உருவின் ரூபத்தையுடைய; குறளாய் குள்ளமான வாமநனாகி; மாவலியை சென்று மாகாபலியிடம் சென்று; இரப்ப மூவடி மண் மூன்றடி நிலம்; இன்றே தா இப்போதே எனக்கு தா; என்று என்று யாசிக்க; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; தாயான் தாவியளந்து கொண்டவனும்; காயா மலர் காயாம்பூப்போன்ற; வண்ணன் நிறமுடையவன் இருக்கும்; சாளக்கிராமம் திவ்ய தேசமாகிய சாளக்கிராமத்தை; அடை நெஞ்சே! ஓ மனமே! நீ அடைவாய்
thāyāy vandha one came in the disguise of mother; pĕy pūthanā-s; uyirum life; thayirum curd; vizhudhum butter; udan uṇda mercifully consumed them in the same manner; vāyān having divine mouth; ĕyān one who does not deserve to beg; thūya being very pure; vari beautiful; uruvin having form; kuṛal̤āy as vāmana; māvaliyai from mahābali; senṛu going there; inṛĕ right now; mūvadi maṇ thā enṛu saying -you should give three steps of land-; irappa as he begged (and as mahābali poured the water); ulagu ĕzhum seven worlds; thāyān one who jumped and measured; kāyā malar vaṇṇan the eternal abode of sarvĕṣvaran who has the complexion of a kāyām flower; sāl̤akkirāmam adai nenjĕ ŏh mind! ṛeach such ṣrī sāl̤agrāmam.