PT 1.5.10

சாளக்கிராமத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லுங்கள்

997 தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்துஅடிகளை *
காரார்புறவின்மங்கைவேந்தன் கலியன்ஒலிசெய் தமிழ்மாலை *
ஆரார்உலகத்தறிவுடையார் அமரர்நல்நாட்டரசாள *
பேராயிரமும்ஓதுமின்கள் அன்றிஇவையே பிதற்றுமினே. (2)
PT.1.5.10
997 ## tārā ārum vayal cūzhnta * cāl̤akkirāmattu aṭikal̤ai *
kār ār puṟaviṉ maṅkai ventaṉ * kaliyaṉ ŏlicĕy tamizhmālai **
ār ār ulakattu aṟivu uṭaiyār * amarar nal nāṭṭu aracu āl̤a *
per āyiramum otumiṉkal̤ * aṉṟi ivaiye pitaṟṟumiṉe-10 **

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

997. O wise ones of this world, chant His thousand names, so you may one day rule the bright land of Nityasūris, the supreme SriVaikuntam! But if you cannot, then recite these Tamil verses— this garland of words sung by Kaliyan, the Chief of the land where clouds gather. He sang of the Lord in ŚālakkiRāmam, where lush fields spread and Thārā birds sing. Speak them, O hearts! Let His praise flow!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகத்து இவ்வுலகத்திலே; அறிவு உடையார் அறிவு உடைவர்; ஆர் ஆர் யார் இருக்கிறீர்களோ; அமரர் நித்யஸூரிகளுடைய; நல் நாட்டு ஸ்ரீவைகுண்டத்தை; அரசு ஆள அரசாளும் படியாக; பேர் ஆயிரமும் ஆயிரம் நாமங்களையும்; ஓதுமின்கள் ஓதுங்கள்; அன்றி அல்லது; கார் ஆர் மேகங்கள் நிறைந்த; புறவின் சூழலையுடைய; மங்கை திருமங்கை நாட்டுக்கு; வேந்தன் தலைவரான; கலியன் திருமங்கையாழ்வார்; தாரா ஆரும் தாரா என்னும் பக்ஷிகள் நிறைந்த; வயல் சூழ்ந்த வயல்களால் சூழ்ந்த; சாளக்கிராமத்து சாளக்கிராமத்தில் இருக்கும்; அடிகளை எம்பெருமானைக் குறித்து; ஒலிசெய் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ் மாலையாகிய; இவையே இப்பாசுரங்களையே; பிதற்றுமினே வாய்வந்தபடி சொல்லுங்கள்
ulagaththu in this world; aṛivudaiyār ārār all the wise people; amarar nithyasūris-; nal nādu distinguished paramapadham; arasāl̤a to rule; pĕr āyiramum his thousand divine names; ŏdhumingal̤ try to recite;; anṛi if you are unable to recite; thārā thārā birds; ārum filled; vayal by fertile fields; sūzhndha surrounded; sāl̤ākkirāmaththu arrived in ṣrī sāl̤agrāmam; adigal̤ai on the lord of all; kār ār filled with clouds; puṛavin having surroundings; mangai for thirumangai region; vĕndhan king; kaliyan āzhvār; oli having tune; sey mercifully composed; thamizh mālai ivaiyĕ these ten pāsurams which are in the form of a garland of thamizh words; pidhaṝumin try to recite incoherently