PT 1.4.9

உலகை உண்டவன் பதரி நாராயணன்

986 கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடன் அனைத்தும் *
உண்டமாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான் *
அண்டமூடறுத்துஅன்று அந்தரத்துஇழிந்து
அங்குஅவனியாள் அலமர * பெருகும்
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
PT.1.4.9
986 kŏṇṭal mārutaṅkal̤ kula varai tŏku nīrk * kurai kaṭal ulaku uṭaṉ aṉaittum *
uṇṭa mā vayiṟṟoṉ ŏṇ cuṭar eynta * umparum ūzhiyum āṉāṉ **
aṇṭam ūṭu aṟuttu aṉṟu antarattu izhintu * aṅku avaṉiyāl̤ alamara * pĕrukum
maṇṭu mā maṇi nīrk kaṅkaiyiṉ karaimel * vatari āccirāmattu ul̤l̤āṉe-9 **

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

986. Our great Lord with a vast stomach once swallowed the clouds, winds, mountains, oceans, and all the worlds at the time of deluge He holds the sun and moon in His radiant form, and encompasses the heavens and endless kalpas within Himself. He is the one who, when Ganga descended through Brahmā’s world and fell from the sky, caused even Bhūmi to tremble at her force. That clear, gem-like Ganga now flows in fullness, and on her sacred banks, in Badarikāśramam, where our Lord lovingly resides.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் மேகங்களையும்; மாருதங்கள் வாயுவையும்; குல வரை குலபர்வதங்களையும்; தொகு நீர் நீர் நிறைந்து; குரை கடல் சப்திக்கும் கடல்களையும்; உலகு அனைத்தும் மற்றுமெல்லா உலகங்களையும்; உடன் உண்ட பிரளயத்தில் உண்ட; மா வயிற்றோன் பெரிய வயிறுடையவனும்; ஒண் பிரகாசிக்கும்; சுடர் ஏய்ந்த சந்திரஸூர்யர்களையுடைய; உம்பரும் மேலுலகங்களையும்; ஊழியும் கல்பங்களையும் உடைய; ஆனான் எம்பெருமான்; அன்று பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த போது; அண்டம் ப்ரஹ்மலோகத்தை; ஊடறுத்து இடைவெளி யாக்கிக்கொண்டு; அந்தரத்து இழிந்து ஆகாசத்தில் வந்திறங்கி; அங்கு அவனியாள் பூமாதேவி நடுங்கும்படியாக; அலமர பெருகும் வருந்தும்படி பெருகியும்; மண்டு நெருங்கி நிறைந்து; மா மணி நீர் ஸ்படிகமணி போல்தெளிந்த நீரையுடைய; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து பதரிகாச்ரமத்திலே; உள்ளானே உள்ளான்
koṇdal clouds; mārudhangal̤ groups of winds; kula varai anchoring mountains; thogu nīr having abundance of water; kurai making sound; kadal oceans; ulagu udan with earth; anaiththum and all other objects; uṇda being the one who mercifully consumed; huge; vayiṝŏn one who has a stomach; ol̤ shining; sudar chandhra (moon) and sūrya (sun); ĕyndha having; umbarum higher worlds; ūzhiyum kalpas (time – brahmā-s days); ānān sarvĕṣvaran who is having as prakāram (form); anṛu when bhagīratha was bringing gangā down; aṇdam brahma lŏkam (abode of brahmā); ūdu aṛuththu finding a way through; andharaththu from sky; izhindhu coming down; avaniyāl̤ ṣrī bhūmip pirātti; alamara to cause anguish (being unable to bear); perugum flowing; maṇdu being dense; being abundant; maṇi clear; nīr having water; gangaiyin karai mĕl on the banks of gangā; vadhariyāchchirāmaththul̤l̤ānĕ is residing in ṣrī badharīkāṣramam