PT 1.3.9

பக்தர்கள் ஆடிப்பாடும் பதரி

976 புலன்கள்நையமெய்யில்மூத்துப் *
போந்திருந்துள்ளமெள்கி *
கலங்கஐக்கள்போதவுந்திக் *
கண்டபிதற்றாமுன் **
அலங்கலாயதண்துழாய்கொண்டு *
ஆயிரநாமம்சொல்லி *
வலங்கொள்தொண்டர்பாடியாடும் *
வதரிவணங்குதுமே
PT.1.3.9
976 pulaṉkal̤ naiya mĕyyil mūttup * pontu iruntu ul̤l̤am ĕl̤ki *
kalaṅka aikkal̤ pota untik * kaṇṭa pitaṟṟāmuṉ **
alaṅkal āya taṇ tuzhāykŏṇṭu * āyiram nāmam cŏlli *
valaṅkŏl̤ tŏṇṭar pāṭi āṭum * vatari vaṇaṅkutume (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

976. When the senses grow frail and the body weak, when old age sets in, and you sit alone, heart heavy, mind disturbed, before your mouth babbles what your eyes merely saw, and thick phlegm is pushed out again and again, hold the cool garland of tulasi in hand, recite His thousand names with love, and join the devotees who circle, sing, and dance. Let us worship Him at sacred Badrinath!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புலங்கள் செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம்; நெய்ய சிதிலமாகும்; மெய்யில் சரீரத்தில்; மூத்து கிழத்தனமடைந்து; போந்து தனிமையில்; இருந்து போயிருந்து; உள்ளம் எள்கி மனம் வருந்தி; கலங்க கலக்கமுற; ஐக்கள் கோழைகளை அதிகமாக; போத உந்தி உமிழ்ந்து கொண்டு; கண்ட வாயில் வந்தபடி; பிதற்றாமுன் பிதற்றுவதற்கு முன்; தண் துழாய் தொடுக்கப்பட்ட குளிர்ந்த துளசி; அலங்கல் ஆய மாலைகளைக் கையிற் கொண்டு; ஆயிரம் நாமம் சொல்லி ஸஹஸ்ரநாமங்களை சொல்லி; வலங்கொள் தொண்டர் வலம் வரும் தொண்டர்கள்; பாடி ஆடும் பாடி ஆடும்; வதரி வணங்குதுமே வதரியை வணங்குவோம்
meyyil in the body; pulangal̤ senses; naiya to become weak; mūththu having become old; pŏndhu going to a secluded place; irundhu remaining (there); ul̤l̤am el̤gi having the heart worried; kalanga as imbalance (in vādha, piththa and ṣlĕshma) occurs (due to that); aikkal̤ kapam (mucus); pŏdha undhi getting pushed out greatly; kaṇda as things are seen; pidhaṝā mun before blabbering; valam kol̤ (performing favourable actions such as) circumambulating etc; thoṇdar ṣrīvaishṇavas who are servitors; alangalāya in the form of a garland; thaṇ thuzhāy cool thiruththuzhāy; koṇdu holding in hand; āyiram nāmam (his) thousand divine names; solli recite; pādi sing; ādum dancing; vadhari sarvĕṣvaran who is residing in ṣrī badhari; vaṇangudhum let us worship