PT 1.3.5

கால் தடுமாறாமுன் பதரியை வணங்கு

972 பண்டுகாமரான வாறும் *
பாவையர்வாயமுதம் உண்டவாறும் *
வாழ்ந்தவாறும் *
ஒக்கவுரைத்திருமி **
தண்டுகாலாவூன்றியூன்றித் *
தள்ளிநடவாமுன் *
வண்டுபாடும்தண்டுழாயான் *
வதரிவணங்குதுமே
PT.1.3.5
972 paṇṭu kāmar āṉa āṟum * pāvaiyar vāy amutam
uṇṭa āṟum * vāzhnta āṟum * ŏkka uraittu irumi **
taṇṭu kālā ūṉṟi ūṉṟit * tal̤l̤i naṭavāmuṉ *
vaṇṭu pāṭum taṇ tuzhāyāṉ * vatari vaṇaṅkutume (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

972. Before we grow frail and cough-worn, Minds wandering, speech confused like the mad. Let us bow to Him, our Lord and Father, The dark-hued Radiance who churned the deepest ocean, Let us worship Him at the sacred Badrinath.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு காமர் இளம்பிராயத்தில் பெண்களை; ஆன ஆறும் விரும்பியதும்; பாவையர் அப்பெண்களின்; வாய் அமுதம் வாயமுதத்தை; உண்ட ஆறும் ருசித்ததும்; வாழ்ந்த சிற்றின்பங்களில்; ஆறும் மயங்கியதும்; ஒக்க உரைத்து பலஹீனத்தால்; இருமி இருமிக்கொண்டும்; தண்டு காலா வயோதிகத்தால் தடியை; ஊன்றி ஊன்றி பல முறை ஊன்றிக் கொண்டும்; தள்ளி தட்டுத் தடுமாறி; நடவா முன் நடக்க நேருவதற்கு முன்னே; வண்டு பாடும் வண்டுகள் ரீங்கரிக்கும்; தண் குளிர்ந்த திருத்துழாய் மாலையுடன்; துழாயான் எம்பெருமான் இருக்கும்; வதரி வணங்குதுமே வதரியை வணங்குவோம்
paṇdu ḍuring adulthood; kāmarāna āṛum the way girls had a liking for him; pāvaiyar those girls-; vāy in their mouth; amudham nectar; uṇda āṛum how he drank; vāzhndha āṛum how he enjoyed petty pleasures (and destroyed the self); okka in a singular manner; uraiththu spoke (and due to that fatigue); irumi coughed (in between); thaṇdu stick; kālā having as foot; ūnṛi ūnṛi (due to weakness, in the same place) pressing it repeatedly; thal̤l̤i becoming weak; nadavāmun before having to walk; vaṇdu pādum beetles humming; thaṇ cool; thuzhāyān sarvĕṣvaran, who is adorning thiruththuzhāy (thul̤asi) garland, his; vadhari ṣrī badhari; vaṇangudhum let us worship