PT 1.3.4

உடல் தளராமுன் பதரியை வணங்கு

971 பீளைசோரக்கண்ணிடுங்கிப் *
பித்தெழமூத்துஇருமி *
தாள்கள்நோவத்தம்மில்முட்டித் *
தள்ளிநடவாமுன் **
காளையாகிக்கன்றுமேய்த்துக் *
குன்றெடுத்துஅன்றுநின்றான் *
வாளைபாயும்தண்தடம்சூழ் *
வதரிவணங்குதுமே
PT.1.3.4
971 pīl̤ai corak kaṇ iṭuṅkip * pittu ĕzha mūttu irumi *
tāl̤kal̤ novat tammil muṭṭit * tal̤l̤i naṭavāmuṉ **
kāl̤ai ākik kaṉṟu meyttuk * kuṉṟu ĕṭuttu aṉṟu niṉṟāṉ *
vāl̤ai pāyum taṇ taṭam cūzh * vatari vaṇaṅkutume (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

971. Before bile surges and eyes shrink with tears, Before old age bends us, our feet stumbling in pain, Worship the One who, as a boy, lifted Govardhana high At Badrinath, where cool ponds brim with leaping fish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பீளை சோர கண்களிலிருந்து கண் அழுக்கு; கண் இடுங்கி வெளிவரும்படியாகவும்; பித்து எழ பித்தம் மேலிடும்படியாகவும்; மூத்து கிழத்தனமடைந்து; இருமி இருமிக் கொண்டும்; தாள்கள் தம்மில் கால்கள் ஒன்றோடு ஒன்று; முட்டி நோவ முட்டி தள்ளி நோகவும்; தள்ளி நடவாமுன் தடுமாறி நடப்பதற்கு முன்னே; காளைஆகி இளம் பிள்ளையாயிருந்துகொண்டு; கன்று மேய்த்து கன்றுகளை மேய்த்து; கடும் மழையிலிருந்து கடும் மழையிலிருந்து; காக்க காக்க; குன்று எடுத்து கோவர்த்தன மலையை; அன்று குடையாக எடுத்து; நின்றான் நின்ற எம்பெருமான் இருக்கும்; வாளை வாளை மீன்கள் குதித்து; பாயும் பாய்கின்ற; தண் தடம் சூழ் குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த; வதரி வணங்குதுமே வதரியை வணங்குவோம்
kaṇ idungi eyes shrinking; pīl̤ai dirt in the eyes; sŏra to come out; piththu bile; ezha to rise; mūththu having attained old-age; irumi cough; thāl̤gal̤ feet; thammil mutti hitting each other; nŏva to cause pain; thal̤l̤i stumble; nadavāmun before walking; kāl̤aiyāgi being a youth; kanṛu mĕyththu tending the calves; anṛu that day (when indhra showered hail storm); kunṛu gŏvardhana hill; eduththu lifted as umbrella; ninṛān stood holding it (for seven days) – his; vāl̤ai fish; pāyum jumping around; thaṇ cool; thadam ponds; sūzh surrounded; vadhari ṣrī badhari; vaṇangudhum let us worship