PT 1.3.2

முதுமை வருமுன் பதரியை வணங்குக

969 முதுகுபற்றிக்கைத்தலத்தால் *
முன்னொருகோலூன்றி *
விதிர்விதிர்த்துக்கண்சுழன்று *
மேற்கிளைகொண்டிருமி **
இதுவென்னப்பர்மூத்தவாறென்று *
இளையவரேசாமுன் *
மதுவுண்வண்டுபண்கள்பாடும் *
வதரிவணங்குதுமே
PT.1.3.2
969 mutuku paṟṟik kaittalattāl * muṉ ŏru kol ūṉṟi *
vitir vitirttuk kaṇ cuzhaṉṟu * mel kil̤aikŏṇṭu irumi **
itu ĕṉ appar mūtta āṟu ĕṉṟu * il̤aiyavar ecāmuṉ *
matu uṇ vaṇṭu paṇkal̤ pāṭum * vatari vaṇaṅkutume (2)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

969. Before we lean on a stick and grip our backs in pain, With trembling limbs, rolling eyes, and coughing loud, Before the young mock, “Was this man ever strong?” Let us go and worship Badrinath, where bees hum sipping honey from blooms.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைத்தலத்தால் ஒரு கையாலே; முதுகு பற்றி முதுகைப் பிடித்துக்கொண்டும்; முன் ஒரு கோல் முன்னே ஒரு கொம்பை; ஊன்றி ஊன்றிக் கொண்டும்; விதிர் விதிர்த்து உடல் நடுங்கியும்; கண் சுழன்று கண்கள் சுழன்றும்; மேல் கிளைகொண்டு உரத்த சப்தத்துடன்; இருமி இருமிக் கொண்டும்; இளையவர் சிறுவர்கள்; இது என் அப்பர் இந்தப் பெரியவர்; மூத்த ஆறு! கிழத்தன மடைந்தது எப்படி; ஏசாமுன் என்று பரிஹஸிப்பதற்கு முன்னே; மது உண் பூவில் தேனைப் பருகுகின்ற; வண்டு வண்டுகள்; பண்கள் பாடும் பண்கள் பாடும்; வதரி வணங்குதுமே வதரியை வணங்குவோம்
kaiththalaththāl with hand; mudhugu paṝi supporting the back; mun oru kŏl having a stick in the front; ūnṛi placing it in the ground firmly; vidhirvidhirththu have the body shaking; kaṇsuzhanṛu eyes rolling [in fatigue]; mĕl kil̤ai koṇdu with high tone; irumi coughing; il̤aiyavar children; appar elders; mūththa āṛu attained old-age; idhu en how (being too old!); enṛu saying this way; ĕsā mun before they scold; madhu honey in flowers; uṇ drinking; vaṇdu beetles; paṇgal̤ pādum humming tunes; vadhari ṣrībadhari; vaṇangudhum let us worship