PT 1.3.10

வைகுந்தப்பதவி கிடைக்கும்

977 வண்டு தண்டேனுண்டுவாழும் *
வதரிநெடுமாலை *
கண்டல்வேலிமங்கைவேந்தன் *
கலியனொலிமாலை **
கொண்டுதொண்டர்பாடியாடக் *
கூடிடில் நீள்விசும்பில் *
அண்டமல்லால்மற்றுஅவர்க்கு *
ஓராட்சி அறியோமே (2)
PT.1.3.10
977 ## vaṇṭu taṇ teṉ uṇṭu vāzhum * vatari nĕṭu mālaik *
kaṇṭal veli maṅkai ventaṉ * kaliyaṉ ŏli mālai **
kŏṇṭu tŏṇṭar pāṭi āṭak * kūṭiṭil nīl̤ vicumpil *
aṇṭam allāl maṟṟu avarkku * or āṭci aṟiyome (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

977. In Badrinath, where bees drink cool honey and sing, lives Sriman Narayana, Praised in these sweet verses by Kaliyan, the Chief of Thirumangai, who made this garland of words like a fence of sacred leaves around Him. If devotees sing and dance to these songs with love, they will rule only in Paramapadam. No other place will have power over them. Such is the blessing for those who worship Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; தண் தேன் உண்டு குளிர்ந்த தேனைப் பருகி; வாழும் வதரி வாழுமிடமான பதரியில் இருக்கும்; நெடு மாலை எம்பெருமானைக் குறித்து; கண்டல் தழைகளை; வேலி வேலியாகக் கொண்ட; மங்கை வேந்தன் திருமங்கைக்குத் தலைவரான; கலியன் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; ஒலி மாலை கொண்டு சொல் மாலையை பாசுரங்களை; தொண்டர் தொண்டர்கள்; பாடி ஆடக் கூடிடில் பாடி ஆடப் பெற்றால்; அவர்க்கு அவர்களுக்கு; நீள்விசும்பில் ஆகாசத்திலேயுள்ள; அண்டம் அல்லால் பரம பதத்தைத் தவிர; மற்று ஓர் வேறொரு இடத்திலும்; ஆட்சி அறியோமே ஆட்சி இல்லை
vaṇdu beetles; thaṇ thĕn cool honey; uṇdu drink; vāzhum living joyfully; vadhari mercifully residing in ṣrī badhari; nedumālai on the supreme lord; kaṇdal thāzhai (a type of plant); vĕli as protective fence; mangai for thirumangai; vĕndhan king; kaliyan mercifully spoken by āzhvār; oli mālai koṇdu with this decad which is having a garland of words; thoṇdar servitors; pādi sing; ādak kūdidil if they can dance; nīl̤ visumbil allāl other than in paramapadham; maṝu any other; ŏr aṇdam a world; avarkku for them; ātchi aṛiyŏm won-t rule