PT 1.2.7

தேவர்கள் ஸஹஸ்ரநாமம் சொல்லும் பிரிதி

964 கார்கொள்வேங்கைகள் கனவரைதழுவிய *
கறிவளர்கொடி துன்னி *
போர்கொள் வேங்கைகள் புனவரைதழுவிய *
பூம்பொழிலிமயத்துள் **
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந்து *
இனமலரெட்டுமிட்டு இமையோர்கள் *
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும் *
பிரிதிசென்றடைநெஞ்சே!
PT.1.2.7
964 kār kŏl̤ veṅkaikal̤ kaṉa varai tazhuviya * kaṟi val̤ar kŏṭi tuṉṉi *
por kŏl̤ veṅkaikal̤ puṉa varai tazhuviya * pūm pŏzhil imayattul̤ **
er kŏl̤ pūñ cuṉait taṭam paṭintu * iṉa malar ĕṭṭum iṭṭu imaiyorkal̤ *
perkal̤ āyiram paravi niṉṟu aṭitŏzhum * piriti cĕṉṟu aṭai nĕñce! (7)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

964. In the Himalayan slopes where black clouds cling To lofty vengai trees that embrace the hills, Where pepper vines grow thick and close, And in terraced fields, tigers prowl among shadowed rocks, In that land of blooming groves and scented breeze, The devas come with radiant garlands, And bathe in sacred lotus-filled ponds. They offer eight kinds of fragrant flowers, Chanting a thousand names with pure devotion, Standing still, heads bowed, worshiping His feet. Go, O heart, and reach Thiruppirithi!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; கன வரை இமயத்தாழ்வரைகளில்; கார் கொள் மேக மண்டலத்தை ஆக்ரமித்து வளர்ந்த; வேங்கைகள் வேங்கை மரங்களை; தழுவிய தழுவிக்கொண்டு இருக்கும்; கறி வளர் வளர்ந்த மிளகுகளின்; கொடி துன்னி கொடிகள் நெருங்கியிருக்க; புனம் கொல்லை நிலங்களிலுள்ள; வரை சிறுமலைகளிலே; போர் கொள் யுத்தத்திற்கு தயாரான; வேங்கைகள் வேங்கைப் புலிகள் இருக்க; பூம் பூத்துக் குலுங்கும்; பொழில் சோலைகளையுடைய; இமயத்துள் இமயமலையில்; இமையோர்கள் தேவர்கள்; ஏர் கொள் அழகிய புஷ்பங்களையுடைய; பூஞ்சுனை தடாகங்களில்; தடம் படிந்து துறைகளிலே தீர்த்தமாடி; இன மலர் சிறந்த; எட்டும் எட்டுவகைப் பூக்களையும்; இட்டு ஸமர்ப்பித்து; பேர்கள் ஆயிரம் ஸஹஸ்ர நாமங்களையும்; பரவி நின்று வாயில் வந்தபடி சொல்லி; அடி எம்பெருமானை; தொழும் வணங்கிக் கொண்டிருக்கும்; பிரிதி சென்று அடை திருப்பிரிதி சென்று வணங்குக
nenjĕ ŏh mind!; kārkol̤ taking over the cloud; vĕngaigal̤ vĕngai (kino) trees; thazhuviya embracing; kanam vast; varai present on the slopes; kaṛi black pepper-s; val̤ār grown; kodi creepers; thunni dense; punam in the lands on river banks; varai small hills; thazhuviya living; pŏr kol̤ ready to fight; vĕngaigal̤ having cheetahs; (always) blossoming; pozhil having garden; imayaththul̤ in himalayan mountain; imaiyŏrgal̤ dhĕvathās such as brahmā et al; ĕr kol̤ beautiful; blossomed; sunai ponds; thadam on the ghats; padindhu bathing; inam belonging to same species; malar ettum eight types of flowers; ittu submit; pĕrgal̤ āyiram thousand divine names; paravi ninṛu speaking incoherently; adi thozhum worshipping; piridhi in thiruppiridhi; senṛu adai go and reach.